பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொருட் பயனிலை 101

பேதைமையால் மயங்கி, கல்லானும் கட்டானும் பிறவற்றானும் பெரியோர்களையே நிலைநாட்டப் புறப்பட்டோம். செயல் வழிப்பட்டு அக வழிப்பட்டு ஒழுகாது, சிறு தெய்வ வழிபாடாகக் கொண்டாடினோம். அறைபறை முழக்கினோம். அவர் சொற்படி நடக்கவல்லார் அவரொருவரே என்னும் மறைமுகத் துணியால், செய்வது அவர்கடன்: புகழ்வது நம்கடன்’ என மடம்பட்டோம். செயல் நாட்டாது. அன்னோர் புகழ்நாட்டற் பொருட்டு பீடி சுருட்டுக் கடைக்கும், கள்ளுக் கடைக்கும், சூதுக் கழகத்துக்கும், வணிகக் கடைக்கும், சந்து பொந்து மூலை முடுக்குத் தெருக்களுக்கும் எல்லாம், பெருமக்கள் பெயர்களையே விளம்பரம் ஆக்கினோம். இவ்வாற்றான் பிறர் அறிய நம் அன்பை வெளிப்படுத்தியதாகக் கழி பேருவகை எய்தினோம். பெரியோரை யெல்லாம் அன்னவர் அறவுரைகளோடு ஒருவகையால் சமாதிப்படுத்தினோம், புகழ் விலைக்கு வாங்கிக் கொடுப்பது போல், நிலையிழிந்த முரணிய ஆரவாரங்களை மேற்கொண்டோம். அதன் மேலும், ஆகுல நீர்மையிற் கலவாது, அறிவும் அடக்கமும் சான்று. தன் நெஞ்சறியப் பெரியோர் உரைச்சுவடு பின்பற்றும் செயலொழுக்கினர்களைப் பழிப்பதும் செய்கின்றோம்” என்று என் உள்ளக்கொதிப்பை, அன்பின் முனைப்பை, ஆர்வமொடு கலந்து ஒருவாறு அவ்வன் பர்கள் முன் கொட்டினேன்.

என் அகப்பண்பை அறிந்த நண்பர்களாதலின், “நீர் சொல்லும் செயல் யாது? நாங்கள் கொடை செய்வது உறுதி. ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்றபடி, ஏனைப் பெரியவர்கட்கு மக்கள் வழிபாடு செய்யு மாங்கு, வள்ளுவருக்கும் செய்ய எண்ணினோம். அவ்வெண் ணத்தால், பதிப்பு வெளியீடு, மண்டபக்கட்டு என்ற வகையில் திட்டமிட்டோம்” என அமைதியொடு மொழிந்தனர். ‘இம்முறை ஆகாதெனின், வேறு நன்முறையை மேற்கொள்வோம் என உறுதி பூண்டனர். அன்னோர் உள்ளத் தூய்மைக்கும், உறுதிப் பற்றுக்கும், ஒப்புரவுக் கொடைக்கும் என் நன்றியை மனமாரக் காட்டி, வள்ளுவர்க்குச் செயத்தகும் தொண்டு முறைகளை விளம்பினேன். நீவிரும் கேட்டுக் கோடல் நலம் என்று இக்கூட்டத்திற் சொல்லுவன்.