பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்மை நிலை 105

(302) என்று இடித்துரைப்பர். தீய மனத்தைத் திருத்துவதே ஒறுப்பின் பயன் ஆதல் வேண்டும். இந்நன்னோக்கம் விடுத்துப் பிறர் குற்றம் பொறுக்ககில்லாது பழிவாங்கும் முனைப்பொடு வல்லாங்கு ஒறுப்பாரே பலர். அதனாற் குற்றஞ் செய்தார் திருந்தாமையோடு வாழ்வுக்கேடும் அடைவர். இங்ஙன் பழிவாங்கும் செருக்கொடு, குற்றஞ் செய்தவன் வேரறுமாறு அளவிறந்து ஒறுக்கும் பொறையிலி களை, ஒறுத்தாரை ஒன்றாக வையாரே (155), ‘ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் (156), கடிது ஒச்சி மெல்ல எறிக (562) என்று வன்மை யடக்குவர். பொருள்வலி மிக்காரும் பிறவலி மிக்காரும் தம்ஆற்றல்களால் மெலியோரை வருத்துவதைக் கண்டு, அல்லற் பட்டு ஆற்றாது அழுத கண்ணிர் அன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை (555), வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து (250) என அச்சவுணர்ச்சியும் அருளுணர்ச்சியும் ஊட்டுவர். ஆற்றல் சான்றார் எளியார்மேல் செய்யும் தீமைகளை யெல்லாம் நன்னெறி காட்டித் தடுத்து நிறுப்பதற்குக் காரணம் ஏழை காக்கும் இரக்கப் பண்பு அன்றோ!

தனியுடைமை பொதுவுடைமைக் கொள்கைகளுக்குப் போர்க்களமாகி நிற்பது இன்று நாம் வாழும் உலகம், இக் கொள்கைப் போர், முதலாளி தொழிலாளிப் போர் எனவும் உடையார் இல்லார் போர் எனவும் பிற பெயரானும் வழக்குப் பெறும். தொழிலாளரும் இல்லாரும் என்றும் உலகத்து உளரேனும் பொதுவுடைமைக்கோள் அணி நணரிக் காலத்தேதான் எழுந்தது. நாம் அறிந்த வரலாற்றுப்படி தனியுடைமை அமைப்பே நாகரிகக் காலந்தொட்டு நிலவி வந்திருப்பது; நாகரிக வளர்ச்சிக்கும் அடிப்படையாக இருந்திருப்பது. வள்ளுவர் காலம் தனியுடைமைக் காலம்; அச்சு ஊர்தியும், வானூர்தியும், நீர்மூழ்கியும், மின்னியற் பொறிகளும், அணுக்குண்டும், நீர்க்குண்டும் போலப் பொது வுடைமை நினைவிலும் கருப்படாத் தனியுடைமைக் காலம். இக் கொள்கைகொண்ட நாடுகளில் இன்றும் இருப்பது போல, அன்றும் ஒருவன் ஈட்டுதற்கும் ஒரு வரையறை இல்லை. கோடி தொகுத் தார்க்கும் (377) என்றபடி ஈட்டியவெல்லாம் தொகுத்துக் கோடற்கும்