பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 06 வள்ளுவம்

ஒரு வரையறை யில்லை. பண்டை வரிவிதிப்பு முறை பெருஞ் செல்வர்க்கென ஒரு வகையான் அமைந்ததுமில்லை. இறை எல்லார்க்கும் ஒப்பவே வகுக்கப்பட்டது. ஒன்னார்த் தெறு பொருளும் வேந்தன் பொருள், (755) என்றாங்குக் குடிமக்கள் தரும் இறைப் பொருளினும் பகைவர் இடும் திறைப் பொருளே பெருமைசால் வருவாயாகக் கருதப்பட்டது. ஒன்றுபோல் யார்மாட்டும் வரிகோடலே செங்கோன்மை; இப் பொதுமுறை விடுத்துப் பெருஞ் செல்வர்.பால் நேரடிப் பொருள் கேட்பது கொடுங்கோன்மை என்று அறிஞராலும் எண்ணப்பட்டது.

வேலொடு நின்றான் இடுவென்றது போலும் கோலொடு நின்றான் இரவு (552)

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின் (558)

என்ற குறள்களே தனியுடைமை மக்களின் பற்று மனப்பான்மைக்கு அன்றும் இன்றும் சான்றாவன.

தனியுடைமை நாட்டின்கண், சிலர்பால் பெருஞ்செல்வம் யாறு நோக்கும் கடல்போல் சேர்வதைத் தடுக்கும் வலி அரசிற்கு இல்லை. தடுக்கும் அரசு உளதேல் அது முறைகோடிச் சூழாது செய்யும் அரசாகவே பழிக்கப்படும். செல்வன் நாட்டன்பினனாய்த் தானே கொடை செய்தால் அல்லது, அவன் நிறை செல்வம் இயல்பாகக் குறைதற்கு வழி பிறிதில்லை. அறிவிலாச் செல்வன் ஒருகால் நெஞ்சு உவந்து ஈதல் ஏனையோர் தவத்தின் பயனென வியக்கப்பட்டது. ஆதலின் தனியுடைமைக் காலத்து எழுந்த திருக்குறள் அற்றைப் பிறநூல்கள் ஒப்ப, உடையவன் பற்று மனம் இளக நல்லுணர்ச்சி கொளுத்திற்று: குழந்தை தன்கைப் பத்துரூபாய்த்தாளை இன்பண்டம் பெற்றக்கால் கொடுத்து விடுமாப் போல, உடையான் தன் கைப்பொருளைப் புகழுக்காக ஈயவேண்டும் என்று நல்லுணர்வு ஊட்டிற்று. ஈதல் இசைபட வாழ்தல் (231) எனச் சிறந்த பண்டமாற்றுக் காட்டிற்று. ஈட்டியவனெல்லாம் கொடாதும், துய்யாதும் தொகுப்பதுவே கருமம் எனக் கொண்டால், நாணயச் செல்வரவின்றி. நாடு வளங்குன்றும்; நல்குரவு பெருகும் என்ற எண்ணத்தால், தனியுடைமை பொதுவுடைமையாய்ப் பரவ,