பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்மை நிலை 109

வாழும். இவையிலவேல், பொதுவுடைமை அரசும் கெடும். பொருள் தனிமையாகுக, பொதுமையாகுக. உடைமைப் பூசல் அறிஞர் நோக்கம் அன்று. முன்னைச் சொற்பொழிவில் நிறுவியாங்கு, பயன் கொள்வாரே உடையார் எனப்படுவர். ஆதலின் பயன் பொதுவுறலே வள்ளுவம் என அறிக. ஈட்டிய ஒர் ஆடவனின் பொருள் குடும்ப முழுதும் பயன்படல் போல, ஒரிடச் செல்வப் பெருக்கம் ஊர் முழுதும் நாடெங்கணும் பயன் செய்ய வேண்டும். குடும்பவுணர்ச்சி உலகவுணர்ச்சி யாதல் வேண்டும். சிலர்பாற் செல்வக் வெளிவரச் செய்து, செல்வப் பயன் பரப்பி, இன்மை யகற்றும் அன்பு நோக்கத்தால், ஒப்புரவு ஈகைகளைப் பொருள்பற்றிச் சொல்லும் இடமெல்லாம். இனிய இன்னா நடைபட வள்ளுவர் அறிவுறுத்தினர். ஒப்புரவினை, கைம்மாறு வேண்டா கடப்பாடு (211) என்றும், ஈகையை, மேலுலகம் இல்எனினும் ஈதலே நன்று (222) என்றும், சிறப்பித்து அழுத்தி மொழியும் குறள்களே ஆசான் கொடைப் பற்றுக்கும் பொருளறிவிற்கும் சான்றாவன.

ஆற்றலாலும் செல்வத்தாலும் வலியார் அவற்றால் மெலியாரை நலியாதபடி, பொறுமையும் ஈகையும் ஒப்புரவும் செய்வித்துக் காத்த திருக்குறள் முறையைக் கண்டோம். நிலைதாழ்ந்தார் நலங் கருதி நிலையுயர்ந்தார்க்குச் சுட்டிய அறங்களைக் கண்டோம். பொறை யுடைமை, வெகுளாமை, இன்னா செய்யாமை, கொடுங்கோன்மை முதலாய அதிகாரங்கள் எல்லாம் இச்சுட்டின்பாலன. செயல் வேண்டுவது வள்ளுவம் என்பதற்கு வினைத்திட்பம், கயமை அதிகாரங்கள் சான்றாதல் போல, வாழ்வாங்கு வாழ்தல் வள்ளுவம் என்பதற்கு மக்கட்பேறு. பொருள் செயல்வகை அதிகாரங்கள் சான்றாதல் போல, மெலியார்மாட்டு இரங்குவது வள்ளுவம் என்பதற்கு நல்குரவு, இரவு அதிகாரங்களே சான்றாவன.

வள்ளுவர் வறுமைச் சுவையைத் தம் வாழ்க்கையில் துய்த்தவரோ, அறிகிலம். ஆயின் வறியோர் துன்பத் துடிப்பினை ஈர நெஞ்சினர் ஆதலின் - நன்கு அறிந்தவர்.

திறவாக் கண்ண சாய்செவிக் குருளை கறவாப் பால்முலை கவர்தல் நோனாது புனிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில்