பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்மை நிலை 11 7

விதித்து இவ்வெல்லாம் அரசு செய்யட்டும் என வன்கண்மை பேசுதல், பற்று எனப்படுமன்றி, நாட்டுக்குப் பயன் எனப்படாது.

காணார் கேளார் கால்முடப் பட்டோர் பேணுந ரில்லோர் பிணிநடுக்கு உற்றோர் யாவரும் வருகென்று இசைத்தமுது ஊட்டி என்றபடி குருடர் ச்ெவிடர் முடவர் போலும் உறுப்பறைகள், தாயில் குழவிகள், சார்பில் கிழவர்கள், வெள்ளம் நெருப்பு நில நடுக்கம் போலும் பூதக்கேடுற்றோர்கள், பல்லாற்றான் நலிவுற்றோர்கள் எனவரூஉம் இந்நிலைய இரப்பாளர்களைப் புரப்பது மக்கள் கடனும் அரசின் கடனும் ஆகும். யார் கடனோ என அரசு வாளா விருப்பதும், அரசின் பொறுப்பென ஊர்மக்கள் தட்டிக் கழிப்பதும், நாட்டின் அடிப்படைக் கேடாக முடியும். தத்தம் கடனெனத் துணிந்து பசி தணிக்கும் சோற்றிகையை, நாணம் மறைக்கும் உடையிகையை, ஒல்லும் வகையான் யாரும் செய்வதே நடைமுறை ஒழுக்கம் ஆகும். ஆதலின் சோறும் உடையும் இல்லா வறியோர்க்கு உடை சோறு ஈவதே வள்ளுவம் எனத் தெளிக. -

“இன்மை நிலை” என்பது இற்றைச் சொற்பொழிவின் தலைப்பு. இத்தலைப்பில் நின்று இதுவரை உரைத்தது யாது? இன்மை நிலை துடைப்பது உடையார் கடன்’ எனப் பிறர் மேற்றாக வைத்து ஆசான் கூறிய அறநிலையைக் கண்டோம். ஒருவன் பசித்துக் கிடக்கக் கண்டால் அப்பசி நீக்குதல் ஈகையாளன் பொறுப்பாயினும், தன் வயிற்றுப் பசிக்கென ஒருவன் பிறனை நோக்கி நிற்கலாமா? பிறர் பசியைத் தான் தீர்த்துதவ மாட்டாது போயினும், தன் பசியிடும்பையை யாவது தானே ஆற்றிக் கொள்ள வேண்டாமா? பிறரைப் புரக்கும் கடமையை மேற்கொள்ளாது ஒழியினும், தற்காக்கும் உரிமை யொன்றையாவது பேணிக் கொள்ளப்படாதா? “ஈதல் இசையாது எனினும் இரவாமை ஈதல் இரட்டியுறும் என்றபடி, பிறர் சுமையை ஏற்றுக் கொள்ளாது விடினும், தான் சுமையாக ஏறிக் கொள்ளப்படாதன்றோ? இவ்வாறு நமக்குத் தோன்றும் மறுப்பெண் னங்களைத் திருக்குறளாரும் எண்ணினர். வலக்கை புண்ணுற்ற காலை அப்பொழுதைக்கென இடக்கை கொண்டு உண்பது போலவும், கால் நொண்டியபோது அக்கணத்திற்கெனக் கோல்