பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12|{} வள்ளுவம்

கவல்வின்றிப் பொழுதுவரை ஊர்வன, திரிவன. பறப்பன. கோழி தன் பல் குஞ்சுகளோடு குப்பை கிளறுவது உம், குருவி நாகனம் காகங்கள் நெடுஞ்சேண் பறந்தும், குறுகுறு நடந்தும் இரைவாய்க் கொள்வது உம், மக்கட்கு அறிவூட்டும் காட்சிகள் அல்லவா? உவமை என்பது, “உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை” எனத் தமிழ் முதல்வன் தொல்காப்பியன் மொழிந்தபடி, சிற்றெறும்பின் முயற்சியன்றோ நம்மனோர்க்கு எடுத்துக் காட்டாய்த் திகழ்வது. ஐயகோ, ஆறறிவுப் பறையறையும் மக்களும், அம் மடிமக்கள் வயப்பட்ட பாவி மாவினங்களும் பசி வறுமை பிணி வறுமைப்பட்டு நலியக் காணுதுமே யன்றி. மக்கள் தொடர்பற்று உரிமை சான்ற பிறவுயிரெல்லாம் பசி பிணியின்றி வாழக் காணுதும், என் கொல்?

பசி, பிணி, பகை என்னும் உயிர்நோய் மூன்றனுள், முயற்சி யின்மையே இருநோய்க்குக் காரணம் என்று தெளிக. ஒருவன் உண்டற்கு யாதுமின்றிப் பசிநோய் உறுகின்றான். “கழிபேர் இரையான்கண் நோய்” (946) என்றபடி, மற்றொருவன் விழுங்கியது செரித்தற்கு இன்றிப் பிணிநோய்ப் படுகின்றான். உண்ணாப் பசி நோயும் உண்ட பிணிநோயும் மெய்யுழைப்பு என்னும் ஒரு மருந்தானே தீரவல்லது. நாம் வாழும் உலகம் உடலால் முயல்வாரை வஞ்சிக்கும் உலகம் அன்று. வருந்தி உழைத்தாலும் பயன் நல்கா மலட்டுலகம் அன்று. “நிலம் படைத்தான் வளஞ் சுருங்கப் படைத்தானல்லன். நிலத்துப் பிறக்கும் எவ்வுயிரும் எத்துணைக்கோடி யுயிரும் பசியாறி வாழும் வண்ணம், முட்டை யுள்ளிடுபோல, நிலவளம் நிரம்ப வைத்துள்ளான்; வளஞ்சான்ற இவ்வையகத்து ஒருயிர் பசியால் வாடிற்று எனின், அஃது அவ்வுயிரின் மெய்ம் முயற்சிக் குற்றமே யன்றிப் பிறப்பின் குற்றமன்று” என்பது வள்ளுவர் தெளிந்த உலகவடிப்படை ஆதலாலன்றோ,

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான் (1062)

என்று படைத்தானை வைவார்போல் உழையா மக்களைப் பழிப்பர். முயன்று உயிர் வாழ்தலே இயற்கை; ஒருயிர் தன்போலும் மற்றோர் உயிர்பால் இரந்து பசியொழிப்பது செயற்கை என ஆள்வினை