பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்மை நிலை 12 1

காட்டுவர். முயற்சி பெருமை தரும் (611), முயற்சி திருவினை ஆக்கும் (616) என உறுதி கூறுவர். முயற்றின்மை இன்மை புகுத்திவிடும்'(616) என அச்சுறுத்துவர். .

மெய்யன்பர்களே வெயில் மழை பனி என்ற இயற்கைப் பருவங்களோடு ஒன்றி, அயராது உஞற்றும் ஆள்வினை மக்கள்தம் உடல், கொல்லன் கைபோல் வன்மை சான்றது; ஆனால் அடுக்களைத் துணிபோல் கண்ணுக்குக் கவர்ச்சியற்றது. இவ்வுடல் வலிய தோற்றத்தை நாகரிகமின்மை எனக் கருதுகிறோம். கால நிலைகளொடு ஒன்றாது, செயற்கை நிழலிலும் காற்றிலும் அமர்ந்து, சுடுநீர் குடித்த வேர்வை யன்றி மெய் வருத்திய வியர்வை அறியா உழைப்பிலிகள்தம் உடல், பொன் பூசினாற் போலும் கண்ணுக்கு இனியது; ஆயின் சுரைபோலும் உள்ளிடு அற்றது; ஒரு காயல் வந்தால் என்பு எண்ணத் தகுவது; ஒரு குழவி யீன்றால் ஒன்பது குழவி யின்றால் ஒக்கும் ஒட்டிய வற்றல் தோற்றம் காட்டுவது. இப் பொய்யுடலை, நாகரிகம் என்று விரும்பியும் வளர்த்தும் வருகின் றோம். நாடும் அரசும் குலமும் மேற்கொள்ளும் போக்கெல்லாம் முயற்சிக் கொல்லிகளாகவே உள. மெய்த் தொழிலாளிகள் ஊதியம் சுருங்கப் பெறுகின்றனர். கல்வியறிவுத் தொழிலாளிகளின் ஊதியமோ, பலர்க்கு மிக வேற்றமாய் அமைந்து கிடக்கின்றது. நேரடியாக உழைப்பவன் சிற்றுதியமும், உழையாது கண்காணிப் பவன் பேரூதியத்தோடு ஆற்றலும் பெறுகின்றான். உடல் நோவா வினைகளே உயர்ந்த வினைகள் என்ற மயக்கெண்ணம் இன்று யார்பாலும் தடித்து நிற்கின்றது. மக்களின் அறிவில் மனப்பான் மைக்கு எண்ணிறந்த பொறிகளும் துணை செய்கின்றன.

மானமாவது உள்ளப் பண்பு: ஒழுக்கப் பண்பு. அதற்கும் பொருளுக்கும் நேரடித் தொடர்பு இல்லை. பொருள் ஏறி இறங்கும் அளவுக்கொப்ப, மானமும் ஏற்ற இறக்கம் உடையது என நாமும் மயங்குகிறோம்; நம் சுற்றுப்புற உலகமும் அப்படியே மதிக்கிறது. இப்பொய்ம்மானம் குடிகெடுப்பது முயற்சியை அறவே கொல்வது. ஒரு காலத்து ஏவல் இடம் பொருள் நிரம்பிய செல்வர்கள் அவை தொலைந்த ஞான்று, நாணி ஒடுங்கி, பலர்காண அஞ்சி, முடங்கிக் கிடக்கின்றனர். கைச்சிறு பொருளை விற்று விற்று வயிறு