பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 வள்ளுவம்

வாய்த்த உடற்கருவி கொண்டு தொழில் செய்தலும், அத் தொழிற் பயன் உறுதலும் உயிர்க்கடன். ஊழ் அல்லது சுற்றுச் சூழ்நிலை ஒருவனை முயலவிடாது தடுத்தாலும், முயற்சிப் பயனை நுகர விடாது தடுத்தாலும், அறிவுடையான் என் செய்வான், என் செய வேண்டும் ஊழ் எனப் பெயரிய ஒரு பொருளே உன்னைப் புறங் காண்பேன். இமயப் பெருமலையையும் புரட்டித் தள்ளும் இடையறாப் பெருமுயற்சிப் படைகொண்டு, நின் முதுகோட்டம் காண்பேன் என்று வீறு பெறல் வேண்டும். நம் வாழ்வு எஞ்ஞான்றும் வினைவாய்ப்படல் சாலுமே யொழிய, ஒரு கணமும் ஊழ்வாய்ப் படல் சாலாது. போட்டியில் தொடக்கத்து விரைந்து ஒடுவான் முடிவில் தோற்பது போல், முதற்கண் விரைந்து தடைசெய்யும் ஊழ் தன் வலியிழந்து அயர்ந்து, ஒரு சீரான இடையறா முயற்சிக்குமுன் இறுதியில் தோல்விப்பட்டே தீரும் என்று அளந்து அறிந்த வள்ளுவர்,

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித் தாழாது உஞற்று பவர் (620)

என முயற்சி வாகை சாற்றினர். ஆதலின், “யாதன் முன்னும் தோலாப் பல்கால் முயற்சியே தனிப்பெரு வள்ளுவம்” என்று ஒழுகுக. அதனாலன்றோ “நின்தாள் வாழிய! நின்தாள் வாழிய!” என்றே சங்கப் புலவர்கள் வள்ளல்களை வாழ்த்துவாராயினர்.

வினைச் செல்வர்களே பசிப்பிணி அன்றுதொட்டு உலகை என்றும் நலிவித்து ஆட்டி வருவதற்கு ஒரு பெருமுதற் காரணம் மக்களின் முயற்சிக் குறைவேயாகும் என்று துணிமின் அடுத்த பெருங் காரணம் சமூகச் சூழல் என்று அறிமின் உற்றவிடத்து உதவாது. தொடுத்து அம்பலும் அலரும் மொழியும் சமூகக் கோளாறுகளால், எண்ணத் தொலையாக் குடும்பங்கள் எழுதத் தொலையா அல்லற்படுகின்றன. உறுபசியும் ஓவாப் பிணியும் சேராது இயல்வது நாடு என்று நாட்டுக் குறிக்கோள் நன்கு உயர்த்திய வள்ளுவர், தம் எண்ணம் செயற்படுமாறு, முயற்சிநெறிக் கோளும் காட்டினார். அரிய கோளும் எளிய வழியும் ஒருங்கு தந்த திருக்குறளாரை. நாம் மறந்த மறப்புக்கு ஓரளவில்லை காண். செயல் வள்ளுவத்தையும் தூய மன வள்ளுவத்தையும் நினையாது