பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுப் பிறப்பு 131

கொள்கைகள் போல்வன. பிறந்த மக்கட்கெல்லாம் ஏற்ற ஏற்ற சூழ்நிலைத் துணை வாய்ப்பின், அனைவருக்கும் முன்னேற்றம் உண்டு என்பது பொய்யாமோ? ஆசிய நாடுகள் வாழ்வு வளன் சுருங்கக் கிடப்பதற்கு ஆண்டுப் பிறந்த மக்கள் அறிவுக் குறை யுடையார் என்பதுவா காரணம் அமெரிக்க ஐரோப்பிய உருசிய நாடுகள் வளம் பெருகித் திகழ்தற்கு ஆண்டுப் பிறப்பு எடுத்த மக்களே அறிவுடையவர் என்று யாரும் அறுதியிட ஒருப்படுவர்கொல்? உண்மை யாது? ஞாலத்து எப்பகுதிக் கண்ணும் 6TT பிறக்கும் எவர்க்கும் இயல்பிலேயே அறிவு உண்டு. அங்ஙன் பிறந்தார் பலர்க்கு இன்று இல்லாதது யாதோ எனின், அறிவென்னும் நல்வித்து வளர்தற்கு உரிய வாய்ப்பு என்னும் உரம் இன்மையேஅரசு என்னும் உழவன் வாய்ப்பு என்னும் எருவிட்டு அறிவுப் பைங்கூழ் வளர்ப்பானேல் எந்நாட்டு வயலகத்தும் குடிவளன் பெருகும், காணிர்! இவ்வுண்மையை நன்கு தெளிந்தன்றோ நம் இந்திய அரசியல் அமைவு தன் குடிமக்கட்கு எல்லாம் ஒத்த வாய்ப்பிடன் அளித்தல் வேண்டும் என்று முறை செய்கின்றது. ஆதலின், வெளிப்படாமை கருதி, மக்களுள் அறிவின்றிப் பிறந்தாரும் உண்டு என்று மயங்கற்க,

. பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்

கொல்குறும்பும் இல்லது நாடு (735)

என்ற குறள் நடையைப் பார்மின். பாழ்செய்யும் உட்பகை ஒன்றுண்டு; பாழ்செய்யா உட்பகையும் ஒன்றுண்டு என இரு பிரிவுப் பொருள் படுமா? வேந்து அலைக்கும் கொல் குறும்பு ஒன்று உண்டு; வேந்து அலையாக் கொல் குறும்பு என மற்றொன்றும் உண்டு என்று இருவகைப் பொருள் படுமா? உட்பகை பாழ் செய்யும் கொடுமைத்து; கொல்குறும்பு வேந்து அலைக்கும் தீமைத்து என அவற்றின் தன்மை சுட்ட வந்த அடைகளாகவே கொள்ளப்படும். உட்பகையும் கொல்குறும்பும் இல்லது நாடு என்று அரசியல் கூறும் ஆசிரியர், தம் கூற்றுக்கு ஏதுக் காட்டுவாராய், பாழ் செய்யும் என்றும் வேந்து அலைக்கும் என்றும் உடம்பொடு புணர்த்தினார் என்றே பொருள்படும். ‘அறிவு அறிந்த மக்கட்பேறு என்னும் தொடரும் இந்நடையுடையது என அறிக. மக்கட்பேறே ஒருவர்க்கு யாம் அறிந்த