பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. 32 வள்ளுவம்

பெரும் பேறு என்ற தம் அடிப்படைக் கோளுக்குக் காரணம் கூறுவாராய், ‘அறிவு அறிந்த’ என்னும் காரணக் கருத்தை அடையாய் இயைத்து மொழிந்தார். இது சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்னும் நடை வனப்புக் கொண்டது. ‘குறுகத் தறித்த குறள் எனப் புகழ்ந்த இந்நூலகத்து இவ்வழக்கு யாண்டும் காணப்படும்.

‘நன்கலம் நன்மக்கட் பேறு (60) என்னும் பகுதிக்கும் மக்கட்பேறு நற்பேறு என்ற அளவே பொருள் கொள்க. திமக்கட் பேறும் ஒன்று உண்டு; அது நன்கலம் ஆகாது என்று எதிர்ப்புரை கோடல் ஈண்டு மெய்யுரையன்று; வள்ளுவர் நெஞ்சமும் அன்று. காதலர்கள் தமக்கு ஒத்த நல்ல துணையை முன்னரே தேர்ந்து கொள்ள இயலும். துணை யொப்பாயின் மணக்கவும், ஒவ்வா தாயின் முதற்கண்ணே மறுக்கவும் இயலும். மக்கட்டேறு துணைப் பேறு போல்வது அன்று. ஈருயிர்ப் புணர்ச்சியால் தானே தோன்றும் ஒருயிர் ஆதலானும், பெறுங்குழவி நல்லது எனா அல்லது எனா முன்னரே ஒரு தலையாத் துணிதற்கு வாராது ஆதலானும், செயற்கு ஒவ்வா எதிர்ப்புரை வள்ளுவர் நெஞ்சம் அன்று என்று கழறினேன். “செந்தமிழ் நாடு எனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது” என்பது போல், “அறிவு அறிந்த மக்கட்பேறு” என்னும் தொடர் காரணம் உள்ளடக்கிய தன்மை நடை என்று துணிக.

இல்லறத்தார் எத்துணையோ பிற புறச் செல்வங்களைப் பெறலாம். அச்செல்வங்கட்கெல்லாம் அறிவு என்னும் உள்ளிடு இல்லை. தம்மிலிருந்து தோன்றும் குழவிப் பொருட்கே தன்னையும் பெற்றோரையும் உலகத்தையும் காணவல்ல அறிவுத்தன்மை உண்டு. பிற எப்பொருட்கும் இல்லா அறிவுப் பேறு உடைமையின், குழந்தைப் பேறு சிறந்த செல்வம் ஆயிற்று என்பார், அறிவறிந்த மக்கட்பேறு அல்லாத பிறவற்றை யாம் ஒரு பேறாகவே கருதுவது இல்லை என்று எதிர் மறுத்து உண்மை வலியுறுத்தினார். விதைத்த நெல்லால் நெல் தோன்றுதல்போல் மக்களால் மக்கள் பிறத்தலின், ‘தம் பொருள் என்பதம் மக்கள் (63) என ஒத்த அறிவுப் பிறப்புச் சுட்டினார். மக்கள் மெய் தீண்டலை உடற்கு இன்பம் (65) என்றும், அவர் சொற் கேட்டலைச் செவிக்கு இன்பம் என்றும் பெற்றோர் அளவில் வைத்துக் காட்டி, தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து