பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுப் பிறப்பு 133

மன்னுயிர்க்கு எல்லாம் இனிது (68) என அறிவுப் பயனையே பரந்தெடுத்து மொழிந்தார். எந்நிலைய மக்களும் பிறப்பில் அறிவு அமைந்த திருவினர் என்பது அடிப்படை வள்ளுவம் என்று பற்றுக. அறிவுப் பிறப்பு வாய்த்த நாம் பெற்ற உடம்பால் குறையுடை யோமாயினும், அவ்வுடற்குறை நம் வாழ்விற்கு ஒரு பெரும் இடையூறு அன்று. கண்ணறை, செவியறை, வாயறை, மூக்கறை, காலறை, கையறை, அளவறை என்று இன்ன உடலறையாளர் வாழ்க்கை இழந்தவர் தாம் எனக் கருதுவது மானிடப் பிறப்பையே அவமதிப்பது ஆகும். முகத்துக் கண்ணாடி அணிந்தவரே கண்ணுடையார் என்பதை நிகர்ப்பது ஆகும். உடற்குறையாளர் பலர் பெரியவர்களாய்ச் செய்த அருஞ் செயல்களை வரலாறு நமக்கு எண்பிக்கின்றது. பாடநூல் முழுதும் வைத்துள்ள மாணாக்கன் வேண்டுங்கால் எடுத்துக் கற்றுக் கொள்ளலாம் என்று ஒரு போதும் முயலாது காலங்கழிப்பான். கையகத்து நூல்கள் உள என்னும் இறுமாப்பால், ஆசான் சொல்வனவற்றை ஊன்றிக் கேளான். நூல் இல்லா மாணாக்கன்குறைநிரப்பும் வேகத்தனாய், நூலுடையான்பால் பால் அதனை இரவல் வாங்கிக் கற்றும், ஆசான் கூற்றுக்களை விரைந்து குறித்தும் முயற்சி வயப்படக் காண்கிறோம். முழு மக்கள் பலரிடத்து மடிமையும் அறிவு மழுக்கமும் இருப்ப, மெய் குறை மக்கள் அனைவோர்பாலும் சுறுசுறுப்பும் அறிவோட்டமும் பிறங்கக் காண்கின்றோம். - தனக்கு ஒரு குறையுண்டு என்று அழுந்தி உணர்ந்த மகன் அக்குறைவை அறிவால் ஈடுசெய்ய முனைவது அவன் பிறப்பியல்பு. உள்ளது கொண்டு இல்லது நிரப்பிக் கொள்ளும் நினைப்பரிய வன்மை நம் அறிவின் இயல்பு என்பது வள்ளுவம். ‘வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும்’ (622) என்றும், அறிவு அற்றம் காக்கும் கருவி (421) என்றும் வரும் குறள்களே கரியாவன.

ஒருவன் பிறக்கும் போது உடன் தோன்றும் புறத்தொடர்புகள் பழித்தற்கு உரியவை அல்ல; பகைத்தற்கும் உரியவை அல்ல. தமிழ் நம் தாய்மொழி; தமிழகம் நம் தாயகம். தமிழ்மொழியன், தமிழ் நாடன் என்பதற்காகப் பிறமொழியர் பிறநாடர் நம்மீது