பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 வள்ளுவம்

பகைகொள்வரேல், அப்பகை பொருளற்றது. ஏன் பகைக்குரிய காரணத்தை நினைப்பினும் நாம் நீக்கிக் கொள்ள முடியாது. நாடும் மொழியும் நிறமும் உருவமைப்பும் எல்லாம் கேளாதே நம்மைப் பற்றி விடுவன. இவ்வுலகக் கட்டுக்கள் நமக்குப் பிறப்பொடு அமைவன. ஒருநாட்டான் ஒருமொழியான் ஒரு நிறத்தான் ஒருமதத்தான் ஒரு குலத்தான் என்பதுவே கொண்டு நாம் இடும் பூசலெல்லாம் பேதைப் பூசல்கள். இப்பெரு வுண்மையைத் தனி மக்களும் அரசும் இன்னும் உணர்ந்தபாடில்லை. விடுக்க கில்லாப் பிறப்பியல்பைக் காரணமாக மயங்கி மக்கள் கொள்ளும் பகை ‘இகல் எனப் பெயர் பெறும். இகழ்ந்தான். சினந்தான். வெஃகி னான், அடித்தான், முறை பிறழ்ந்தான் என்ற அடிப்படை மேல் வரும்பகை ‘பகல் எனப் பெயர் பெறும். இங்ஙன் கொள்ளும் பகையை நாம் அகற்றிக் கொள்ளவும் முடியும். இகழாதும் சினவாதும் வெஃகாதும் அடியாதும் பிறழாதும் ஒழுகுவமேல், முன்பிழைத்தவற்றைப் பொறுக்கும்படி வேண்டுவமேல், காரணத் தின் மேலெழுந்த பகைப்பகல் காரணம் ஒழியத் தானும் ஒழியும். இவ்விளக்கத்தின் கருத்து என்னை? பிறப்பொடு அமையும் அமைவுகள் இகழுதற்கோ, இகலுதற்கோ காரணம் ஆகா என்பது.

குருடும் செவிடும் ஊமும் முடமும் ஆகப் பிறக்கும் மக்கள் உளர். இக்குறைப் பிறப்பு ஒருவர் விரும்பிப் பெற்றுக் கொள்வதில்லை. மக்கள் ஆற்றலுக்கு உட்படாச் செயல் பலவற்றுள் இஃதொன்று. பெற்றோரைப் பொறுத்தும் அவர்தம் முன்னோரைப் பொறுத்தும் பிறது.ழ்நிலையைப் பொறுத்தும் பிறக்கும் குழந்தையின் உடலுருவம் அமைகின்றது. ஆதலின், உடன்தோன்றும் உடற் குறையை மக்களாய்ப் பிறந்தார் யாரும் ஒரு சொல் சொல்லார். உருவு கண்டு, எள்ளாமை வேண்டும் (657) என்பர் வள்ளுவர்.

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை யின்மை பழி (618)

என்பது அறிவு சுட்டி வினையூட்டும் குறள். பொறிவாயில் ஐந்து அவித்தான் (6) கோளில் பொறியில் குணம் இலவே (9) என்ற பிறவிடத்துப் போல இவ்விடத்தும் பொறி’ என் கிளவி மெய் வாய் கண் முக்கு செவி என்ற உறுப்புப் பொருளே படும். பெற்ற உடற்