பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுப் பிறப்பு 137

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் (241), ஒழுக்கம் விழுப்பம் (131) என்று வருவன எல்லாம் பிரிப்பில் அக வுடைமைகளே பொய்யா வாழ்வுடைமைகள் எனத் துணிவு செய்யும் வள்ளுவக் குறள்கள் ஆகும்.

இவ்வாறு உடன்பாட்டுமுகத்தான் அகவுடைமைச் சிறப்பு வலியுறுத்திய ஆசிரியர் அதனை எதிர்மறை முகத்தானும் நிறுவுவர். கற்றார்முன் சொல்லாது இருக்கப் பெறின், கல்லாதவரும் நனி நல்லர் (403) என ஊமையாக்கியும், கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் (577) எனக் குருடாக்கியும், கேட்பினும் கேளாத் தகையவே (418) எனச் செவிடாக்கியும் உறுப்பறை செய்வர். “ஊமையராய்க் குருடர்களாய்ச் செவிடர்களாய் வாழ்கின்றோம். 6T66’s மக்கட்புலவன் பாரதி இகழ்ந்த குறிப்பும் இங்கு நினையத்தகும். முகத்து இரண்டு புண்ணுடையர் கல்லாதவர் (393) என ஆறாப்புண் ஆகவும், கல்லாதான் எழில் நலம் மண்மாண் புனைபாவை (407) எனப் பொம்மையழகு ஆகவும், அற்றம் மறைத்தலோ புல்லறிவு (846) என விலங்கு ஆகவும், போஒம் அளவும் ஒர் நோய் (848) என நடைப்பிணம் ஆகவும், நலம் அற்ற புறவுடைமைகளை வள்ளுவர் இழித்துரைப்பர். இதனால் தெரியக் கிடப்பது என் புறநிறைவு நிறைவாகா: புறக் குறைவு குறைவாகா. உடம்பிற் சார்ந்த உணவு நலம் போல, எல்லாவற்றாலும் நீங்ககில்லாத் தன்னுடைமை வளர்ச்சியே வாழ்வுயர்ச்சி என்பது வள்ளுவம். இப்பெருவுண்மையை,

அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர் (430)

என்ற ஒருகுறள் விதி, மறை என்னும் இருநடையானும் துணிவு செய்யும்; எனவே நாம் அறிவுப் பிறப்பினம் என்று அறிக.

நாம் எல்லாரும் மனிதவுடல் பெற்றுளோம் என்றாலும், அவ்வுடல் வன்மை ஆளுக்கு ஒருதரமாக அமைந்து கிடக்கின்றது. உடம்பை ஆட்சிப்படுத்திய பயிற்சிக்கு ஏற்ப மெய்யாற்றல் விளையும். அதுபோல் நாம் இயல்பில் அறிவுடையோம் என்றால் அறிவாட்சியைப் பொறுத்து அறிவுக்கூர்மை பிறக்கும். குழந்தை நிலையில் பிறங்கும் அறிவு முனைப்பு, பருவம் ஏற ஏறத் தேயக்