பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 வள்ளுவம்

பொருட்படுத்தற்க என்று நமக்குச் சொல்லிக் கொடுக்குமாப்போல்

இப்பாடல் கிடக்கின்றது. இது வள்ளுவர் நெஞ்சம் ஆகுமா? கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர் குழாஅத்துப் பேதை புகல் (840)

“அறிவுடையார் அவைக்கு அறிவிலான் செல்வது, பகரவி ஒட்டிய காலைப் பூப்படுக்கையில் வைத்தற்று’ என்று பிறரைப் பழிப்பான் நமக்குக் கற்றுக் கொடுக்க எழுந்ததா இக்குறள் இசை வேண்டா ஆடவர் தோற்றம் நிலக்குப் பொறை (1003), ‘புறன் நோக்கிப் புன்சொல் உரைப்பவன் உடற்பாரத்தை வையம் அறன் நோக்கி ஆற்றுங் கொல் (189), ஈதல் இயையாக் கடை சாதல் இனிது (230) என்றவையெல்லாம் நம்மைச் சாகடிக்க எழுந்த குறள்களா? ஒர்மின்!

மக்கள் பெயரெல்லாம் தொகுத்த ஒரு பெயர்ப் பட்டியல் உண்டு என வைத்துக் கொள்வோம். என் பெயரும் ஆண்டு உளதா என்று முதற்கண் தன்பெயரைப் பார்க்கும் வேட்கை எழும். யாரோ இருவர் தம்முள் உரையாடும்போது இடையே மாணிக்கம் என்று சொல்லின், என் பெயரன்றோ, என்னைப் பற்றி ஏது பேசுகின்றனர் என்று கேட்கும் அவா தோன்றும். இந்நினைவு பிழையற்ற இயல்புடையது. இவ்வேனவா தற்கலப்பு எனப்படும்.

வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு ஆழ்கின்றாய் ஆழாமற் காப்பானை ஏத்தாதே; சூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன் பல்காலும் வீழ்கின்றாய் நீஅவலக் கடலாய வெள்ளத்தே என்னும் திருவாசகப் பாடலை மணிவாசகர் பாடினார் என்பது உம், தம் நெஞ்சுக்கு அவர் இடித்துரைத்தனர் என்பது உம் மறந்துபட, நம் வாசகமாக, நம் நெஞ்சுக்கு அறைந்த வன்புறையாக, நாம் தற்கலப்பு உணர்ச்சிப்படுகின்றோம். இவ்வுள்ளக் கலப்பினை “நான் கலந்து பாடுங்கால்” என்றார் இராமலிங்க அடிகள். வாழ விரும்புவார் திருக்குறளைத் தாம் கலந்து கற்க வேண்டும். இங்ஙன் கற்பரேல், சிலருக்கு வாழ்வில்லை என ஒதுக்கினார் என்றும், சாகப் பழித்தார் என்றும் வள்ளுவரைப் பிறழ உணரார்கள். ஒதுக்குவதாலும் பழிப்பதாலும் உலகப் பெருமகனார்க்கு வரும் ஊதியம் என்னோ?