பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 50 வள்ளுவம்

பெறின் எல்லா வளமும் பெருக்குவோம் என்றெல்லாம் நெஞ் சறியப் பறைசாற்றி உரிமைப் போர் தொடுத்தோம். உரிமை பெற்ற பின், நம் உள்ளத் துடிப்பு எங்ஙன் செத்தது உண்மைக்கோள் யாண்டு மறைந்தது பயிர் வளர்த்தற்கு அன்றோ களை பறித்தோம்; நீண்டநாள் களைகட்ட அயற்சியான் பைங்கூழ் செழிப்பிக்கும் கடன் ஒழிந்தோம். ஒன்றன் அழிவு மட்டும் பிறிதொன்றன் ஆக்கமாய் விடுமா? ஒர்மின் தீயதன் மாய்வோடு நல்லதன் வளர்ப்பினையும் போற்றல் வேண்டும்.

எண்ணியாங்கு விடுதலை சிறந்து வாழும் நாம் தொடர்பு சான்ற தமிழகக் கல்வி குறித்து ஈண்டுச் சில நினைவோம். தமிழகம் என்றும் அடிமைப்பட்டுக் கிடந்த நாடன்று. தமிழ் மக்கள் எஞ்ஞான்றும் தளை பிணிபட்ட மக்கள் அல்லர். நம் அடிமை சில நூற்றாண்டு அணிமையது. உரிமை வாழ்வே தமிழகத்தின் பல்லாயிரவாண்டு வாழ்வு. தமிழ் மொழியோ எனின், நாடும்

மக்களும் கால் தளையுண்ட ஞான்றும் தன்னிலை விடாத் தனி

-

மொழி. தமிழ் இதுகாறும் அடிமைபட்டதின்று. இனியும் பிறர் அடிப் படுவதின்று, கன்னித் தமிழ், குமரித் தமிழ் என்னும் வழக்காறுகளே இவ்வுண்மைக்குக் கரியாவன.

உரிமைசால் இந்தியத் தமிழகம் நீடிய உரிமை நுகர்ந்த பண்டைத் தமிழகத்தின்மேல் ஒருகண் செலுத்த வேண்டாவா? விடுதலை பெற்ற நமக்கு உரிமை யல்லது வேறறியா அற்றைத் தமிழர் நினைவு

தோன்றல் ஒவ்வாதா? இந்நாள் வளரத் துடிக்கும் தமிழுக்கு

முன்னாள் வளர்ந்த உரிமைத்தமிழ் ஒரு வழி காட்டியாகாதா? எண்ணுமின் இற்றைக் கல்வித் துறையாளர் முன்னோர் வகுத்த கல்வி யாது, கற்ற முறையாது, கல்வி நோக்கம் யாது? எனச் சிற்றளவேனும் நம் தமிழ் நூல்களை ஆராயப் புகுந்தார் அல்லர். ஞாலம் உள்ளளவும் கற்கத் தகும் பெரும் பனுவல்கள் தமிழ் மொழிக்கண் உளவே; இவை எழுதற்குச் செவ்விய கல்வி அமைந்திருக்க வேண்டுமே எனச் சிறக்கணித்த பார்வையும் செய்திற்றிலர். இந்நாட்டுக் கல்வி வகுக்கப் பிறநாடுகளுக்கே பறப்பர். அயல்நாடு செல்கையைப் பழிப்பவன் அல்லேன். அறிவு எத்திசைக் கண்ணது ஆயினும் ஆகியர், யார்பாலதாயினும் ஆகுக, அஃது