பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 52 வள்ளுவம்

நூல்களே நமக்குப் பற்றுக்கோடு ஆவன: சிக்கல் தீர்க்கும் வழி வழங்க வல்லன: முதல் ஆய்வுக்கு உரியன.

திருக்குறள் ஈராயிரம் ஆண்டுத் தொன்மைத்து என்பதனால், அது நுதலும் கருத்துக்கள் உயிரற்றன; தள்ளுப்பட்டன என்று புறக்கணித்தல் அறிவுக் கூர்மையன்றுகாண். வள்ளுவ நம்பிக்கு முந்நூறு ஆண்டு முன் திகழ்ந்த அசோக முடிவேந்தன் சக்கரம் இந்நாள் நம் இந்தியக் குடியரசின் பொறியென அமைய வில்லையா? இதுகாறும் ஞாலத்தாய் வளர்த்த வளர்ப்பு எல்லாம் நேர்கோடிட்டாற் போல், இருபதாம் நூற்றாண்டுக் காலக்கோடு வரைந்து, இனி ஆகா என்று அறவொதுக்கி வாழ வொல்லுமா? அசோகப் பெருமகன் தன் குடைக் கீழ்ப் பல்லினப்பட்டு வதிந்தாரை யெல்லாம் குடிமக்கள் என ஓரினமாகத் தழுவிப் புரந்தான்; குருதியாறு பரப்பும் கொலைப் போரை வெறுத்தான். மறவலி பெருக்காது அருள் என்னும் அறவலி பெருக்கி ஆண்டான். இம் முடியண்ணல் ஆட்சிப் பூட்கைகள் நமக்கு உடம்பாடாவன என்ற இசைவினால், அச்சான்றோன் அறவாழியை நம் அரசாழியாக அறிவொடு ஏற்றுக்கொண்டோம். ஒன்றினைக் கொள்ளற்கும் தள்ளற்கும் புதுமையோ பழமையோ காரணம் ஆகா: கால அணிமையோ தொன்மையோ, இட அண்மையோ சேய்மையோ ஏதுப்ப்டா. ஒத்த நோக்கமே - ஒருமனப்பட்ட குறிக்கோளே - முதற் காரணம் எனத் துணிக.

தமிழும் தமிழ் வேந்தும் தமிழகமும் ஞாயிற்றன்ன ஆற்றல் தோற்றித் திங்கள் அன்ன புகழொளி பாரித்து உயர்ந்த எண்ணங்கள் செயற்பட்டஞான்று பிறப்பு எடுத்தது திருக்குறள். இடையறவுபடா உரிமைப் பருவக்கன்னி, வள்ளுவச் செம்மலின் தூய அறிவொடு நெடுநாள் மணங்கூடி இன்புற்று, ஈன்ற ஒரே உலகத்தனித் தமிழ்க் குழவி திருக்குறள். நமக்கு நாளடைவில் சிறிது சிறிதாகக் கல்வி பற்றிப் புலனாகும் நல்லெண்ணம் எல்லாம் முன்னரே வள்ளுவர் திறம்படக் கண்ட எண்ணங்கள். தொடர்பற்ற இரு விஞ்ஞானிகள் ஒரே நுண்மையைத் தனித்தனி கண்டு பிடித்தனர் என்று நாம் வரலாறு அறிவோம். இருவர்க்கும் ஒன்றிய பொது சூழ்நிலையே அதற்குக் காரணம் ஆவது. நாம் துய்க்க இருக்கும் உரிமைச்