பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 வள்ளுவம்

பொற்றொடி நங்கை எனப் புகழப் பட்டாள். இன்று காண்பது போல் மொழிப் பூசல் இருப்பின் அன்றோ தாய்மொழிக் கல்வியே தலை என்று விதந்து அறைதற்கு இடனுண்டு பாலொதுக்கம் இருந்தால் அன்றோ பெண்பாலும் கற்க வேண்டும் என்ற விதப்புக் கிளவிக்கு வாய்ப்பு உண்டு இணைய அடிமை யுணர்வுகள் நெஞ்சு நினையா உரிமை கனிந்த காலம் ஆதலால் வாழும் உயிர்க்குக் கண் என்ப” என இயல்பு நடையில் யாத்தார். வாழ்க்கைத் துணை என நலஞ்சான்ற மக்களினத் தாயர் உயிர்கள் அல்லர் என்றும், வாழா உயிர்கள் என்றும் நினைக்கவே நாணுவர் அறிவுடையார். சிறு முதுக்குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்; என்று இரங்கினான் கோவலன். இதனால் அறிவு பெண்பாற்கும் உண்டு; அறிவின்மை ஆண்பாற்கும் உண்டு என்ற பாற்பொதுமை பெறப்படும்.

காலவொழுக்கத்தை ஒரு பாங்கு சொன்னடை காட்டவல்லது. “இப் பதவிக்குப் பெண்டிரும் விண்ணப்பிக்கத் தகுவர் என்று விளம்பரங்கள் இன்று வெளியாகுவ. ஆணும் பெண்ணும் ஒரு நிகரினர் என்பது இந்திய அரசியற் பாயிரம். இருந்தும் மக்கள். எண்னத்து ஒன்றிய சமவுணர்ச்சி இன்னும் பதியவில்லை என்பதை மேலை விளம்பர நடை தெரிப்பது அன்றோ? அழிவுக் கொள்கையால் தாய்ப்பெண்டிரைக் கற்கவிடாது ஒதுக்கினோம்; அவ் வொதுக்கத்தால் நாடு அடிமைப்பட்டது என்னும் ஒரு பகுதி உண்மையைத் தெளிந்து, பெண்ணினமும் கற்கவேண்டும் என்று ஊர்க்குகின்றோம். உரிமைப்பேறு அண்மையில் வந்த காரணத்தால், பெண்டிரும் என எச்ச நடையில் பேசுகின்றோம். இன்னும் சில்லாண்டு சென்ற பின் - உரிமை வளர்ந்த பின்- ஆணும் பெண் ணும் விண்ணப்பிக்கத் தகுவர் என ஒத்த நடையிற் சுட்டுவோம். உரிமைப் பயிற்சி மேலும் கைவந்த பின்றை. யாரும் விண்ணப் பிக்க’ எனப் பொது நடைப் படுத்துவோம். பதவித் தகுதியை மாத்திரம் வரையறுத்து, விண்ணப்பிக்க என்று ஒரு சொல்லால் சொல்லும் நாளும் ஒன்று வருங்காண். அதுதான் உரிமை பழுத்த காலம்; சோற்றுக் கவலை யறியாச் சோணாட்டு உழவன் போல உரிமை யுணர்வு மறந்த இயல்புக் காலம். வள்ளுவர் இன்ன நல்லுழி வாழ்ந்த தொல் மகன் ஆதலின், பெண்ணும் கற்க: ஆணும்