பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுக் கல்வி 155

பெண்ணும் கற்க யாரும் கற்க என்றாங்கு உரிமைக் குறைவு நடைசெய்யாது ‘கற்க என ஏவல்நடை யியல்பின் மொழிந்தனர். அடிமைத் தொடி உடைத்த ஐயாண்டு இந்திய விடுதலைச் சிறுமி கற்கத் தகும் முதற் பாட நூல் யாது? உரிமை இன் துயில் கொள்ளும் திருக்குறள் காண். கற்பிக்கத் தகும் முதலாசான் யாவன்? அகர முதல’ என நூல் துவங்கிய வள்ளுவர்காண். இகலில்லா எஃகுடையார் இவ் வுண்மையைத் தொழுது ஒப்புவர்.

அறிவுக் கேளிர் உறையிட்டுத் தலையணையைப் போற்றுகின் றோம். மேலட்டை போட்டு நூலினைப் பேணுகின்றோம். மெய்ப்பை புக்கு உடற்புறம் காக்கின்றோம். பணத்தாளினும், வெள்ளி பொன் நாணயங்களைச் சேமிக்கின்றோம். மிகுதி கிடைப்பதாயினும் அற்றைக்கூலிக்கு அலைவதை விடுத்து ஊதியம் சுருங்கிய மாதத் தொழில்களை நாடுகின்றோம். இவற்றின் கருத்து என்கொல்? நிலையாப் பொருளுள்ளும் ஒரளவு நிலையுடைப் பொருளுக்கு மக்கள் மதிப்புக் காட்டுப. மதிப்பளவு பொருளின் நிலைப்பளவைப் பொறுத்தது. செல்வத்திலும் கல்வி விழுமியது என்பதற்கு, அதன் அழிவின்மை அன்றோ காரணம் கல்வி கேள்வி அறிவு முதலாம் அகவுடைமைகள் மாய்வில என்று துணிந்த வள்ளுவர் நிலையாமை அதிகாரத்து உடம்பு முதலாம் புறவுடைமைகளையே விளி.வனவாகத் தெரித்தோதினர். ஆதலின், கேடில் விழுச் செல்வம் கல்வி (400) என்ற வள்ளுவத்தை அடிமுதலாக வைத்துக் கல்வி கோலுவார் மேற்செய்வன செய்தல் சால்புடைத்து.

வெள்ளத்தால் வெந்தணலால் அழியாக் கல்வி இன்றோ கல்வித் திட்டம் தன்னாலே விரைந்து அழிவதுமன். இளஞ் சிறுவர் சிறுமியர் வரன்முறையாக ஊர் கற்றுக் கூற்றங் கற்று மாகாணம் கற்று நாடு கற்று உலகம் கற்றுச் செல்லாது, மென்மெல மலராது. முறைப் பிறழ்வால் பலூன் போல விம்மிப் பரந்து, வாழ்வு சுருங்குப. பள்ளி முதல் கல்லூரி இறுவாய் மாணாக்கர் எண்ணற்ற கருத்துக்களைச் செரித்தலின்றி அவக்கென விழுங்கிக் கொண்டு அறிவு மெலிய. ஏற்க மாட்டாமலும் ஏற்றன. சுமக்க மாட்டாமலும் பயிற்சிக் கொம்பின்றி நெஞ்சு தடுமாறுப. ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து (398) என உயிரறிஞன் பாராட்டிய கல்வி, வயிறு முட்ட