பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f 56 . வள்ளுவம்

எடுத்தவன் கழுத்துணவு போல ஒரு பொழுதும் உள்ளிருக்க மறுக்கின்றது. குளிக்க வந்தவனைக் குளம் சேறு பூசி விடுத்தால் ஒப்ப இன்று கல்விக் கூடங்கள் உள்ள அறிவுக் கூர்மையையும் மழுக்கி விடுப. இவ்வெல்லாம் கேடில் விழுச் செல்வம் கல்வி (400) என்ற வள்ளுவ முரண்கள்.

யாரும் கற்றலின் முதன்மையை, வள்ளுவர் போல நாமும் உளங்கொண்டோம். இம் முதலொழுங்கு வர வேற்கத் தகுவது. மற்றுப் பல்வகையானும் கல்வி வள்ளுவங்களை இன்னும் உணராது தூங்குகின்றோம். முயற்சியையும், பயிற்சியையும் இரு கால்களாகக் கொண்டு இவ்வுலகத்து வாழ்வு நடத்தவேண்டியவர் மக்கள். அன்னோர்க்குப் பொன்றா அறிவரண் செய்து விடுகை தான் கல்வி நிலையத்தின் முழு நோக்கமேயன்றிக் கோபுரத்தோடு அறிவுக் கட்டடமே எழுப்பிக் கொடுப்பது அதன் நோக்கு அன்று. வாழும் உயிர்க்கு அறிவுக்கண் திறப்பதுதான் கல்விக் கோளே யொழிய, அக்கண் காணுதற்குப் பொருள்களையும் உடன் தொகுத்துக் கொடுப்பது அதன் கோட்பாடு அன்று. முத்துப் போல்வது பல் என்றால் தம் பற்களை விற்கப் புறப்படுவாரோ? கேடில் விழுச் செல்வம் என்பது சிறப்பைக் குறிக்கும் அளவிற்று. தாம் பெறும் பள்ளிக் கல்வி குழவித் தன்மைத்து; பள்ளி விடுத்த பின் பன்னூல் உணவூட்டிக் கொழுகொழுவென வளர்த்தற்கு உரியது என்பதனை மாணாக்கரும் கற்குங்கால் உணரவில்லை; நாமும் உணர்த்த வில்லை. - .

பள்ளி நுழைந்த மகாருக்கு உலகனைத்தையும் ஒருங்கு கற்பித்துவிடுவது என ஓர் இரக்கமில் வன்கண்மைப் பற்றி, பொது வறிவு என்னும் குறியொன்றே எண்ணி, எல்லார்க்கும் எல்லா வற்றிலும் அங்கொன்று இங்கொன்றுமாக, இறுதிவரை காட்டுக் கல்விதான் நல்கி வருகின்றோம். பத்தாண்டு படித்த பின்றையும், அந்தோ ஒருதுறைச் சிறப்பறிவும் மாணாக்கர் எய்திற்றிலர். இதுதான் கல்விமுறைகொல் கண்மாய் முழுதும் பரவிநிற்கும் முழங்கால் அளவு நீரால் நன்செய் பயிராகாதது நிகர்ப்ப, மக்கள் அனைவோரும் பொதுவறிவே பெற்றுப் பெற்று ஒழிவதால், நாடு வினைச் சிறப்பும் விளைவுப் பெருக்கும் உறாது. இந்தியத் தாயின்