பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுக் கல்வி 1.59

தேர்வை ஒழிப்பதால் கல்வி நேரடியாக உயர்ந்து விடாது. இடையூறு நீங்கிற்று என்பதுவே கருத்து. சொல்லிக் கொடுத்தவற்றை மாணவர் ஏற்றுளரோ என்று காண்கை கல்வி வகுப்பார் தலைக்கடன். இந் நோக்கத்தான் ஏற்படுத்திய தேர்வுமுறை, கல்வி முதலையே வேரறுக்கும் அழி கருவியாய் மாறிய காரணத்தால் அன்றோ, தேர்வு ஒழிக. என்று யாப்புறுத்தினேன். அழிவு நெறி கூறிய யான் ஆக்கநெறி கூறவும் கடப்பட்டுள்ளேன்.

யான் வேண்டும் கல்விச் செந்நெறி நாண்முகக் கேள்வி முறை எனப் பெயர் பெறும். ‘வருந்தித் தாம் கற்றன. ஒம்பாது மற்றும் பரிந்து சில கற்பான் தொடங்கல் கல்விக் குற்றம் என்பர் குமர குருபரவடிகள். முதல் நாட்பாடத்தை மாணாக்கர் விளங்கினரா? தெளிந்து உளங்கொண்டனரா என ஒவ்வொருவரையும் ஆசான் வகுப்பில் வினவல் வேண்டும். வீட்டில் எழுதிவரச் செய்ய வேண்டும். முன்னைப் பாடத்து ஐயம் களைந்தபின், புதுப்பாடம் தொடங்கல் வேண்டும். நாள்தொறும் ஆசான் பாடம் வினவின், மாணாக்கர் நாள் தொறும் பாடம் போற்றிப்படிப்பர். இஃது உயிரின் இயல்பு தேர்வுக்குச் சின்னாள் முந்தி, இரவு பகலாக விழித்து, உடல்நோவ மனங்கசந்து, எவ்வெப் பொருளையோ பதறி உருப்போடும் குறுக்குத் தீவழி இல்லாதொழியும். ஆசிரியர் மாணாக்கரிடை இடையறா நல்லுறவு வேண்டும், வேண்டும் என நாம் உரத்துப் பேசுகின்றோம். வழியறியாது மயங்குகின்றோம். கல்விக் குடும்பத்து ஆசானும் மாணாக்கனும் உடன் பிறப்பு எனப்படுவர்; பெற்றோர் குழந்தை எனப்படுவர். இன்ன இரு சாராரைத் தேர்வு வலிந்து பிரிக்கின்றது. கல்வி வகுப்பார்க்கு ஆசிரியன் மாட்டு நன்னம்பிக்கையில்லை. இவ்விழிவுக்குத் தேர்வே காரணம் என்பது மறுக்கவொண்ணுமோ? நாண்முகக் கேள்வி முறையால், உண்மை விளம்பின், மாணவர் கல்வித் தரம் பெருகுவதோடு, ஆசான் கல்வித் திறமும் வளப்படும். நேர்முகக் கல்வி முறை நிகழுதற்கு, பள்ளி முதல் கல்லூரி இறுவாய், ஒரு வகுப்பின் மாணாக்கர் எண்ணிக்கை இருபது அல்லது இருபத்தைந்துக்கு உள்ளாதல் வேண்டும். இதனால் செலவு மிகுதியாகும் என அஞ்சற்க. தேர்வுப் பெயரால் பலகால்வாயாக