பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுக் கல்வி 16.1

தொடர்பான குறிப்புக்களை அறிதற்கும் துதிற்கும் வாணிகத்திற்கும் பன்மொழிப் படிப்பு வேண்டப்படும். மொழி பெயர்த்து நம் மொழி வளர்ப்பார்க்கும், மேல்நிலை சென்ற அறிவியல் ஆய்வாளர்க்கும் மொழி பல வேண்டும். மொழிக்கலை ஆராய்வார்க்கும், பிறமொழி மூல இலக்கியங்களின் சுவை காண விழைவார்க்கும் மொழிப் பன்மை நன்று. எனினும் நாட்டிற்கும் அரசிற்கும் இவ்வகைக் கல்வியாளரின் எண்ணிக்கை பத்தாயிரத்தில் ஒன்றளவு கூட ஆகாத் தவநளிைக் குறைவு என்பது ஒருதலை.

நம் நாட்டிற்கு வேண்டும் மொழி பல கற்றாரை, உரிய மொழி வழங்கும் நாடுகளுக்கு விடுத்துக் கற்றுவரச் செய்வோம். நீரில் வைத்து மீனியல்பு கற்குமாப்போல, ஒரு மொழி பயிலும் இடத்துத் தங்கி அதனைக் கற்றலே பாடுடைத்து. நம் நாட்டுத் தலைநகரங் களிலும் பெருங் கல்வி நிலையங்களிலும் பன்மொழிச் சூழ் நிலையை ஆக்கிக் கொள்வோம். அதனால் உள்நாட்டிருந்தே பிற மொழி கற்க விரும்பும் நம்மனோர் ஆங்கண் சென்று பன்மொழிக் கல்வி பெறுவர். இதுவே செலவு சுருங்கிய நேர்வழியாகும்: எண்ணிய பயனும் நன்னர்க் கைகூடும். இம்முறை கோடி, ஒருசிலர் வேண்டுகையின் பொருட்டு, ஊர்தொறும் நகர்தொறும் அனைத்துக் குடி மக்கட்கும் பன்மொழி வைப்பு அறிவழிக்கும் என்பதில் ஐயமில்லை. ஒருமொழிப் பெருந்தேர்ச்சி யில்லா மாணாக்கர்க்கு, ஊர்ப்பட்ட மொழியழுத்தம் வாழ்க்கை முரிவாய்விடும். நாம் வளர்ந்து தாங்கிய சுமையை வளரும் குழந்தைமேல் வைப்பது அறிவு முடஞ்செய்யும். இப்பன்மொழிப் பாடெல்லாம், கற்றனைத்து ஊறும் அறிவு (396) என்னும் வள்ளுவ முரண்கள்.

உயர்ந்த எண்ணத்திற்குப் பரந்த அறிவு வேண்டும் என்பது மறுப்பில் உண்மை. உலகவறிவும், இந்திய வறிவும், தமிழகவறிவும் தமிழ் மகனுக்குத் தன்மொழி வாயிலாய் வாராவோ? யார்க்கும் அவரவர் தாய்மொழிக் கல்வியில் அன்னைப் பால்போல் அறிவுப்பால் ஊறாதோ? ஒவ்வோர் அறிவிற்கென ஒவ்வொரு மொழியா வேண்டும்? இன்ன மொழி இன்ன அறிவு பயப்பது என அங்ஙன் மொழிகளிடை வரம்பு ஒன்று உண்டுகொல் இவ்வெல்லாம் மோகக் கூத்து. ஞாலத்து மொழிகள் ஒவ்வொன்றிலும் சிற்சில *2J- 1 l.