பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 வள்ளுவம்

சொற்களைத் தொகுத்துப் பயின்று கொள்வதால், உலக வொற்றுமையோ உலகவறிவோ எள்ளளவும் வாராது காண். அறிவு என்பது பல்பொருட் சரக்கு. அச்சரக்கு இழுக்கும் ஊர்தியே மொழி எனப்படும். ஆதலின் ஈட்டத்தகும் முடிபொருள் அறிவு எனத் துணிக. உலக மக்களின் உலக நாடுகளின் இயல்பினையும் வரலாற்றினையும்: தமிழ் வாயிலாய்க் கற்றுத் தமிழ் மகளும் தமிழ் மகனும் விரைந்து ஞாலவறிவு பெறுப, இந்திய அரசியலையும் பல்வேறு இனப் பழக்கவழக்கங்களையும் தத்தம் தாய்மொழியில் உணர்ந்து கற்பதால், தமிழ் மக்களும் பிறபகுதி மக்களும் இகலின்றிக் கட்டாயம் இன்றி இந்திய வொருமை நாடுப. அறிவு நிலைக்களமே அன்பு நிலைக்களம்.

- இந்நாட் சொற்பொழிவின் தலைப்பாக அறிவுக் கல்வி எனப் பெயரிட்டுக் கொண்டேன். இன்று காண்பது சொற்கல்வி, ஒலிக் கல்வி என்று அடிப்பிழை சுட்டுவதே இத்தலைப்பின் உட்கிடை. இந்தியா பெருத்த மொழிச் சேற்றில் உடல் பதித்துக்கொண்டு அறிவு மெலிந்து வருகின்றது என்றும், மறைவான மொழிப் பூசலால் இந்திய வொருமைத் தளமே கெடுங்கொல் என்றும் என் நெஞ்சம் அடிக்கடி கவல்வது உண்டு. உரிமை பெற்ற இந்தியாவின் தலைக் கடன் மக்கட்கு அறிவு வழங்குவது; அவரவர் தாய்மொழி வாயிலாய்ட் பல்துறையறிவும் நல்குவது. அறிவே கல்விப்பயன் எனவும், தாய் மொழியே அனைத்துக் கல்வித்துறைக்கும் உரிய தனி நேர்வாயில் எனவும், முதற்கண் இந்தியப் பெருந்தாய் அச்சமின்றி அறிவு பெறுவாளாக,

சிறந்த பல்துறை யறிஞர்கள் பலராக இந்தியாவில் தோன்ற வேண்டுமேல், பொய்ம்மானம் நச்சாது ஐயுறவு ஆடாது, தாய்மொழிக் கல்வியே கல்வி என, அரசு கற்புநெறி போற்றல் வேண்டும். பள்ளி கல்லூரிகளைச் சூழ்ந்து வழங்குவது எம்மொழி, அம்மொழிதான் கல்வி மொழியாதல் வேண்டும். நுண்ணிய நினைவு, கூரியவறிவு, கற்பனைவளம் எல்லாம் வழங்கும் இயற்கையாற்றல் வழிவழித் தாய்மொழிக்கே உண்டு. இதுவரை இந்திய மக்கள் தொகைக்கு ஏற்பப் புத்தறிஞர் பல்காமைக்குத் தாய்மொழி என்னும் முதலின்மையே தலைக்காரணம். தாய்மொழிக்குக் கல்வித்