பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுக் கல்வி 163 a

துறைக்கண் அடிமையிருக்கும் வரை. அதனை ஒரு கீழ் நிலைப் படுத்தும் வரை, நாடு அரசுரிமை பெற்றபோதும், மக்கள் மீளா அறிவடியர், நினைவடியர் ஆவர் என்பது திண்ணம். இந்தியக் குடியரசு அறிவுடை மக்களால் நிலைக்க வேண்டுவது. கல்விப் பேரால் நாடு செலவிடும் நூற்றினும் இறந்த கோடித்தொகை, பன்மொழி மோகத்தால் இன்று கொன்னே கழிகின்றது; சிதறுண்டு சிறு பயனாய் ஒழிகின்றது. தாய்மொழியில் அறிவூட்டுவது என்ற முறை செய்யின். இப்பெருந்தொகையால் இந்திய இளங் குழந்தைக் கெல்லாம் கட்டாயக் கல்வி இன்னே உறுத்தலாம் அன்றோ?

கற்பவை கற்க, கசடறக் கற்க, கற்றனைத்து ஊறும் அறிவு என்ற கல்வி வள்ளுவம் மூன்றும் நம்மனோர் உடனே தழுவற்கு உரியன: நம் கல்வித் துறையாளர் கைக்கொள்ளத் தகுவன. கல்விக்கு அழிவும் இழிவும் தருவன எவையாயினும் அவை ஒதுக்கற்பாலன. கேடில் விழுச்செல்வம் கல்வி’ என்ற அடிமுதல் வள்ளுவம் கல்வித் திட்டத் துக்கெல்லாம் ஓர் உரைகல். திட்டம் வெளியிடுமுன் அக்கல்லில் உரை செய்க. ‘தாய்மொழி வாயிலும் பல்துறை யறிவும் என்பது கல்வி வகுப்பார் வாய்பாடு ஆகுகதில். இத்துணிவு இருப்பின் நிலையெனச் சிறந்த கல்வி இன்றுபோல் அடிக்கடி நிலையாமைப்

படாது. -

இதுகாறும் கல்வி வள்ளுவம் நான்கினை, இற்றைக் கல்வி நிலைகளோடு பொருத்திச் செய்வன தவிர்வன கண்டோம். இனி அறிவு வள்ளுவங்களைக் காண்பதற்கு முன், தமிழ்க்குறள் ஆசான் ஆண்ட கல்வி அறிவு ஒட்பம் என்ற முக்கிளவிகளின் நுண்பொருளை இவண் விளங்கிக் கொள்வோம்.

மன்னன் ஒருவன் வைகறைத் துயில் எழுந்து உலகு நோக்கி - னான். அவன் கட்பார்வைக்கு முதற்கண் பட்டான் கொல்லன் உலைக்களத்து ஒரு சிறுவன். அச்சிறானைப் பார்த்துத் திரும்பும் போது சுவராணி அரசன் தலைப்புறத்தைப் புண்ணுறுத்தியது. ஊர்காப்பாளரை ஒல்லை ஏவி அவ்விளைஞனைக் கட்டிவரச் செய்தான், ஈசலிறகு போலும் புண்பட்ட மன்னன். வந்த பையனை விளித்து, “உனக்குக் கொலைத் தண்டனை விதித்தேம். இவனைக் கொல்லுக” என்று ஆணையிட்டான். சாகத் துணிந்த இளையான்