பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுக் கல்வி 1.65

என்னும் குறட்பகுதிக்கண், ஆவது என்னும் கிளவி எதிர்வோடு தக்கதையும் சுட்டும். கல்வி வேறு அறிவு வேறு: கற்றார் வேறு அறிவுடையார் வேறு. பலகற்றும் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் காணாதாரைக் கல்லார்’ என்று நிறுத்தாது, அறிவிலாதார் (140) என்று முடித்தல் காண்க. அறிவுடையார் எல்லாம் உடையார் என்ற தனிப் பெருமை கற்றார்க்கு இல்லை. அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்’ என்ற குழுவில் ஆவது அறியாக் கற்றாரெல்லாம் அடங்குவர். நிரம்பிய நுண்ணிய நூல்பல கற்பினும், அவற்றுள் வாழ்வுக்கு நல்லது நாடிக் காணும் முன்னுணர்வு வேண்டும் கருத்தானன்றே. தமிழ்மொழியில் காட்சி என்பது அறிவுக்கு ஒரு பெயராயிற்று. பல நல்ல கற்றக் கடைத்தும்’ என்ற திருக்குறளும், காதல் மிக்குழி கற்றவும் கைகொடா’ என்ற சீவக சிந்தாமணியும், கற்றவர் ஞானம் இன்றேல் காமத்தைக் கடக்கலாமோ என்ற இராமாயணமும் அறிவிலாக் கல்வியின் அழிவு தெரிப்பன.

மக்களாய்ப் பிறந்தார் எல்லார்க்கும் இயற்கையறிவு என்னும் ஒட்பம் உண்டு. ஆனால் பலர் அவ்வொட்ப மணியைக் கையாண் டிலர், தீட்டிலர். தீட்டிய ஒரு சிலரும் தம் அறிவுக் கூர்மையை, “படை கொண்டார் நெஞ்சம்போல் (253) என்றபடி, பண்பாக ஆண்டிலர் என்று கண்டார் அறிவாசான். இயற்கையறிவை ஒளிபெறத் தீட்டவும் ஒழுக்கம்பெற ஆளவும் கற்றுக் கொடுக்கும் இரு நோக்கினராய், ‘அறிவு அதிகாரத்தைப் புதுமுறையில் யாத்தார். அறிவாவது யாது? என்று விளம்பாமல், அறிவு தீட்டும் இடங்கள் யா என்று விரித்துரைத்தார். இடையறா அறிவுத் தீட்டுக்குக் கருத்துக்கள் நிரம்பவேண்டும். எண்ணச் செறிவு சான்றோர் எழுதிய நூல் களிடைத் திணிந்து கிடக்கும் என்ற காரணத்தான் அன்றோ கல்வி மக்களுயிர்க்கு இன்றியமையாததாயிற்று.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - (423)

என்பது அறிவு உராயத்தகும் ஓரிடம். யாரொருவரும் தங்காலத் துக்கும், சூழ்நிலைக்கும், தாம் பெற்ற கல்வி கேள்விகட்கும், தம் வாழ்நிலைக்கும் உள்ளாகித்தான் கருத்துக்களை மொழிவர்: எழுதுவர். கொள்கலம் போல் அப்படியே ஏற்றுக்கோடல் அறிவு