பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுக் கல்வி 1 67

செலுத்துதற்கும், அடக்கிக் கருவியை ஆளுகின்றோம். இவ்வடக்கி இல்லா ஊர்திகளுக்குச் செல்லுரிமை அரசு வழங்காது. இவ்வுவமை நெஞ்சுக்கும் அறிவுக்கும் பொருந்தும். உலகச் சூழல்கள் என்றும் நம் மனத்தைக் கரைமோதும் அலைபோல் தாக்கிய வண்ணம் உள. தாக்கெண்ணங்களுள் வேண்டாதவற்றை முன்னரே ஒதுக்கிக் கொள்ளும் ஒய்வு மனத்துக்கு இல்லை. நன்றோ தீதோ ஒன்றினைப் பற்றி நிற்றல் மனவியல்பு. அவ்வழி அமைச்சன்போல் காத்தோம்பல் அறிவின் கடன். தீயது பற்றுங்காலைப் பிடித்திழுத்தலும், மீண்ட மனத்தை நல்வழிப் புகுத்தலும் அறிவின் ஒழிவில் தொழில்களாம். மனம் என ஒன்றுள்ளவரை அறிவின் வினைக்கு ஈறில்லை. உள்ளத்தின் இயக்கத்தை ஆகாவழி மறிப்பதாலும் ஆகுவழி உய்ப்பதாலும் அறிவு திட்டுப் பெறும்; கூரிதாய் ஒளிறும். அறிவு தீண்டா நெஞ்சு மூக்கனாங் கயிறு இல்லாப் பொலிகாளை ஒக்கும். பிறப்பறிவை வாழ்வுத் தொடர்புடைய அனைத்துக் கருத்தோடும் உராய்ந்தும் பகுத்தும் கணித்தும் ஆகவேண்டும் என்பது வள்ளுவம் ஆதலின், தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு (422) மெய்ப் பொருள் காண்ப தறிவு (423), பிறர் வாய் நுண்பொருள் காண்பது அறிவு (424) ‘உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு (426) என்றவாறு அறிவாளுகைக்கு இடம் பல வகுத்தோதினர். உடம்பு போல் அறிவு யார்க்கும் உள்பொருளாதலின், அது வேண்டும் என விதிப்பது பொருளற்றது என்று எண்ணினார் வள்ளுவர்; அதனால் ஆள்வினை அதிகாரத்து மெய்ம்முயற்சி வேண்டினாற்போல, அறிவதிகாரத்து ஆவது காணும் அறிவாட்சியே வேண்டினர் என்று கொள்க.

திருக்குறள் கற்பவர் தம் அறிவை ஆளுவர் என்று நம்பியே ஆசிரியர் நூல் யாத்தார் என நாம் உளங் கொள்வோமாக. தன்னறிவு என்னும் தூய நெடுங்கையை நீட்டுவார்க்குத்தான் ஏற்ற குறட்பொருள்கள் அகப்படும். இந்நூல் பலநிலையறம் கரையும் மாட்சித்து: ஆதலின் அப்பன்னிலையுள் தன்னிலை எது எனக் காண்பது அவரவர் அறிவின் தனிக்கடன். ‘தூங்குக தூங்கிச் செயற்பால’ (672) என்ற குறட்படி, நீட்டிச் செய்யும் வினைகள் யாவை? செய்தக்க வல்ல செயக்கெடும் (466) எனின், செய்யத்