பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுக் கல்வி - 171

ஆகின்றார். தூய அறிவுப் பசியுடையார் தாம் இறைக்கொள்கை இலர் எனினும், என் தாய் மலடி என்பது போலத் தம் செயலால் இறை யுண்மை ஒப்பியவர் ஆகின்றார். தத்தம் கருமமே கட்டளைக்கல் அன்றோ -

ஒருவர் எய்திய இறைத் தன்மையைக் கணித்தற்கு வேறு அளவுகோல் வேண்டா; அவர்தம் அறிவே அமையும். காலவுணர்வும், தூயவுணர்வும் நம்மறிவு பெற்றது எவ்வளவு அவ்வளவே காண், நாம் எய்திய இறைத் தன்மையும் வணங்கிய இறைத் தொழுகையும் என்று துணிக.