பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்ப வாழ்க்கை I 73

விழாப் பேரிட்டுப் பின்னும் மடிபுகும் இந்நாட்டில், நாம் எண்ணாளாகக் குறளைச் செவிமடுத்து வருகின்றோம், வாய்மைக் கழகம் காட்டும் ஒழுங்கு இது. யாரும் எவ்வினைக்கும் ஓய்வு விழைவது இந்நூற்றாண்டு இயல்பு. நீங்களும் குறளோய்வு வேண்டவில்லை; எனக்கும் அது மனத்திற்படவில்லை. செல்லும் வாழ்க்கைக்கு ஒய்வு இருந்தாலன்றோ செய்யும் குறளுக்கு ஓய்விருக்கும். மனமடிவும் வினைமடிவும் ஒய்வல்ல. ஒருவினை விடுத்து மறுவினை தொடங்குவதே - மாற்றமே - ஒய்வு எனப்படும். நாள் தவறா நம் குழு எதனை அறிவுறுத்துகின்றது. உயிரினும் சிறந்த வாழ்வுநூலை - செயல்நூலை - நம் முன்னோர் கல்லாது கொன்னே கழித்து இழந்த ஆண்டுகள் பல என்று கவன்று, அவற்றையெல்லாம் ஈடு செய்யும் முனைப்பை யன்றோ இக்குழு தோற்றரவு செய்கின்றது. செய்யப் பிறந்த திருக்குறளைச் செய்யாது தற்கொலைப் பட்டோம்; இனிப் படோம் என்ற மனப் புரட்சியை யன்றோ இவ்வவை புலப்படுத்துகின்றது. எனைப் பெரிய வேலையையும் சற்றே இரு என்று தள்ளி வைத்து, ஆறு முதல் ஏழு வரை ஒரு மணிப்பொழுது ஈண்டுக் குழுமும் உங்கள் ஆர்வம் இனி இத்தமிழகத்து நீடுவாழிய. நாட் கருமத்தை ஒதுக்கிக் கொண்டு, எக்காரணத்தானும் குறளொதுக்கம் செய்யா உங்கள் ஒழுங்கு இனிவரும் தமிழர்க்கெல்லாம் அமைவதாக. வள்ளுவர் மக்கள் வாழ்விற் குறள் கண்டார்; மக்கள் அவர் குறளில் வாழ்வு &m 6 Ling Tas.

‘குடும்ப வாழ்க்கை’ என்பது எட்டாம் நாள் மாலைத் தலைப்பு. இத்தலைப்பை வெளியிடும் போதே என் அகம் உவக்கின்றது; இன்பம் சிறக்கின்றது. ஏன்? குடும்பமாதல் உயிரின் இயல்பு: உலகநிலை. ஆண், பெண் துறவு குறித்து மூன்று கோட்பாடுகள் நூல் வழக்கிலும் மக்கள் வழக்கிலும் உள. அவற்றுள் ஒன்று பிறவித்துறவு: என்றும் மணமின்றி இருப்பது. இம் மணவாத்துறவு வள்ளுவர்க்குச் சிறிதும் உடன்பாடன்று. ஆண் தனிமையும், பெண் தனிமையும் வாழ்வு எனப்படா, காமஞ் சான்ற உயிர்ப்பிறப்புக்கு இயற்கை யாகா. ‘மிக நலம் பெற்றாள் தமியள் மூத்தற்று’ (1007) எனத் தனி நிலைக்குக் கழிவிரக்கப்படுவர் ஆசிரியர். ஊமை நாவடக்கத்தன்