பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174: வள்ளுவம்

ஆகான், பேடி புலனடக்கத்தன் ஆகான். கண்ணிருந்தும் தீயது காண மறுப்பவன், செவியிருந்தும் தீயது கேட்க மறுப்பவன். நாவிருந்தும் தீயது சொல்ல மறுப்பவன் அடக்கமுடையவன் ஆவான். ஆகுங்கால் விடுத்து ஆகாக்காலை மடக்கும் வன்மையே அடக்கம் எனப்படும். இஃது ஒழுங்கியல். இந்நிலை காம நுகர்ச்சிக்கும் ஒக்கும். பரத்தை நச்சாது, பிறன் மனை நயவாது ஒழுகும் ஒரு மனை வாழ்க்கை மெய்யாகவே காமவடக்கம் எனப்படும். இவ்வுலகியல் ஒழுக்கத்தை - பிறப்பொழுக்கத்தை - தன் நெஞ்சு அறியத் துறத்தல் என்பது பிறப்பையே மாய்ப்போர்க்குக் கடை போவதாகும். ஒரு மனை வாழ்க்கையாம் இல்லறம் நன்றா; இளமைத்துறவறம் நன்றா என ஆராய்ந்த வள்ளுவர் இத்துறவு நெறியை இயற்கைக்குப் புறத்தாறு: என்றும், இத்துறவோரை இயற்கை கடக்க முயல்வார்’ என்றும், இத்துறவுப் பயனை, போஒய்ப் பெறுவது எவன்’ என்றும் பொருந் தாமை சுட்டினர். அறத்துப்பால் - திருக்குறள் முதற்பால் - இல்வாழ்க்கை, வாழ்க்கைத்துணை. மக்கட்பேறு எனக் குடும்பப் பற்றுக்கோடு கொண்டு அன்டான் இயங்குவதை நாம் உணரவேண்டும். ‘அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை (49) என்றார்; ஆதலின் குடும்பம் அறமும் ஆயிற்று வாழ்வும் ஆயிற்று.

இரண்டாவது கோட்பாடு குடும்பத்துறவு, மனைவியை இடை நடுவிற் கைவிட்டுச் செல்வது. இம் மணந்த துறவும் வள்ளுவர்க்கு உடம்பாடன்று. உடம்படுவரேல், குடும்பம் என்பது ஆடவன் நலத்துக்கே ஏற்படுவது என்றும், பெண் அவன்தன் இன்பக் கருவி என்றும் கருதியவர் ஆவர். மனைவியைப் பெண்ணிற் பெருந்தக்க யாவுள’ (54) என்றும், மக்களைப் பெறுமவற்றுள் யாம் அறிவதில்லை (61) என்றும், ஒருதலையாய்ப் பாராட்டிய ஆசிரியரோ, அன்னோர் துறத்தற்கு உரிய துன்பப் பொருள் என்று முரணி மொழிவர் துறவு குறித்த வள்ளுவத்தை அறிய விரும்புவார் துறவு அதிகாரத்தை நோக்குவாராக. மனைவி மக்கள் சுற்றம் முதலாய குறிப்பின்மையை - உயர்திணைத் துறவின்மையை - நினைவாராக, ‘அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்ற குடும்ப நிலையைத் துறக்கச் சொல்வாரா? ஒரறம் விடுவது பிறிதோர் அறமாமா?