பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 வள்ளுவம்

எண்ணுவோம். வித்திய விதை செத்தொழிந்ததென யாரும் துணியார். ஒழிந்தால் மரம் தோன்றுமாறு எங்ஙன் தோன்றிய மரத்திலும் அது தாங்கும் பல் வித்துக்களிலும் இட்ட முதல்விதை உடனிலையாய் வாழ்கின்றது. மேலெழுந்த எல்லா வித்தும் ஒரு தாய் வித்தின் உரத்தைக் கொண்டு அதன் பண்பைத் தந்து நிற்கின்றன. அதுபோல, வெளிப்பட்ட அனைத்துக் குறள்களும் வள்ளுவர் நெஞ்சுரம் பெற்று அந்நெஞ்சின் நினைவைப் புலப்படுத்து நிற்கின்றன. இவ்வுவமையை தொடர்ந்து நினைவோம். ஒரு வித்து தாய்மரமாய்த் தோன்றி அளவிறந்த வித்துக்களை ஈனும். அங்ஙனம் பிறந்த ஒவ்வொரு வித்துக்கும் தன்னிலிருந்து எண்ணிலா வித்துக்களைப் பிறப்பிக்கும் ஆற்றலுண்டு. பாருங்கள் இதனால் நாம் கொள்ளக் கிடப்பது என்ன? குறள் ஒவ்வொன்றும் தனி வித்தாகி, நவில்தொறும் நூல் நயம் போலும் (783) என்றாங்கு, எத்துணையோ எண்ணங்களைத் தன்னில் தோற்று விக்கும் ஆற்றல் சான்றது என்பதாம்.

மணற்கிளைக்க நீருறும்; மைந்தர்கள் வாய்வைத்து உணச்சுரக்கும். தாய்முலை யொண்டால்; - பிணக்கிலா வாய்மொழி வள்ளுவர் முப்பால் மதிப்புலவோர்க்கு ஆய்தொறும் ஊறும் அறிவு என்னும் திருவள்ளுவமாலை திருக்குறள் அறிவூற்று என இயல்பு கூறும் அழகு காண்க. ஆகவே, வள்ளுவர் நெஞ்சு உள்வித்தாம்; அவர் யாத்த பல்குறள் புறப் பல்வித்தாம் என்பது துணிபு.

இனி, குறள்களிடை ஆசிரியன் நெஞ்சங் காண்டல் யாங்ஙனம் எனப் பார்ப்போம். உள்ளக் கருத்தின்ை வெளிக்காட்டும் வன்மை சொல்லுக்கு ஒரளவுதான் உண்டு. கோவலன் கண்ணகியோடு மதுரை மூதூர் செல்கிறான் என்ற காட்சியை எவ்வளவுதொலை நாடகம் காட்ட வியலும்; அவ்வளவேதான், சில பொழுது அவ்வளவினும் குறைவாகத்தான். சொல் ஒருவன் உள்ளக் கருத்தினைத் தொடக்கூடியது. ஒரளவேனும் உட்கருத்தினைத் தொடக்கூடியது. ஒரளவேனும் உட்கருத்தைப் புறப்படுத்துவது கிடக்க, வினைவேறு சொல்வேறு பட்டார் தொடர்பு (819) எனைத் தொன்றும் சொல்லினால் தேறற்பாற் றன்று (825) என்ற