பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 வள்ளுவம்

குறள்களால், பண்பு உடைய குடும்பமே பயன் உடைய வாழ்வாகும் என்று விதிப்பர் ஆசிரியர்.

குடும்பம் என்பது ஆண் பெண்ணாகிய குடியானவர் மக்கட் பயிர் விதைத்து வளர்க்கும் மனை வயல், குழந்தை மழலை ஒலிக்கும் இன்பக்காடு, சமூகம் கொந்தளித்து மோதும் துன்பக் குன்று: செயலெல்லாம் நினைவெல்லாம் ஒடி விழும் பற்றுக்கடல்; அன்பு நீரற்ற காலை சினப்பாலை. குடும்பம் என்பது உலகத்துப் பலர் எண்ணமெலாம் சிறு பேரலையாக வந்து தாக்கும் மண் தீவு, சமூக வழக்கும் புத்தறிவும் பூசலிடும் போர்க்களம்; அரசு காக்கும் நுண்வேர்; நாட்டின் எந்நிலையும் காட்டும் அறிவுக் கண்ணாடி முயல்க, முயல்க என்று தூண்டும் முள்ளிருக்கை அச்சமில் ஒழுக்க நிலையம்.

குடும்ப நோக்கம் ஒரு குறுகிய நோக்கம் என்பது அறிவுக்குற்றம். இடச்சிறுமை குறுகிய எண்ணம் என்றும், இடப் பெருமை பரந்த எண்ணம் என்றும், இடவளவால் எண்ணவளவு கணிப்பது இற்றைய உலகத்துடிப்பு. தமக்குப் பிடியாவிடின், சமய வேற்றுமைக் கண் நாத்திகம் என்றும், அரசியல் வேற்றுமைக்கண் பொது வுடைமை’ என்றும் நா மறந்தும் உரைக்கப் பழகிவிட்டது. அஃதொப்ப, கருத்து வேற்றுமைக்கண் எதனையும், குறுகிய நோக்கம் என்று நாத்தழும்பேறச் சொல்லி, அவ்வளவில் மகிழ்தல் இந்நூற்றாண்டின் ஆகாப் போக்கு. உலகமாவது பல் குடும்பத் தொகுதி, தனிக் குடும்பம் உலகத்தின் ஒரு கூறு. ஆதலின், தன்குடி காப்பவனை ஒரளவால் உலகம் காப்பவனாக ஒப்பவேண்டும். காவா தொழிவானேல், அக்குடி பிறர் பாரமாம் அன்றோ?

அடுத்த குடும்பத்தையும் ஒரு சிறு உலகம் என்று மதியாது, அதனைக் கெடுத்தாயினும் தன் குடும்பம் பேணும் தடிமைதான் குறுகிய நோக்கு ஆமன்றி, அல்லது செய்யாத் தன்னலம் பரந்த நோக்கின் முதலெனத் துணிக. அடுத்த அகத்து முற்றத்து வீசுவான் தன் இல்லக் குப்பை கூட்டும் மடமைதான் சிறுகிய எண்ணம் ஆமன்றி, தன் தோட்டத்து மேட்டில் குவிப்பான் தன்மனைத் தூய்மை செய்யும் அறிவு உயர்ந்த நோக்கம் எனத் தெளிக. பிறரை நன்கு மதியாது தன்னையே மதித்துக் கொள்வது புன்மை நோக்கம். பிறரையே மதித்துத் தன்னை மதியாமை வாழா நோக்கம். பிறரையும்