பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்ப வாழ்க்கை 181

நலமாய் உடலுரமாய்ப் பெருக வேண்டும். காம நுகர்ச்சி வேட்கை தணிப்பதோடு, உயிரிற் கலந்து மனநலமாய் நெஞ்சுரமாய் வளரவேண்டும். உறுதோறு உயர் தளிர்ப்பத் திண்டல் (1106) என்ற குறளால் காதலர் மெய்திண்டல், மக்கள் மெய்தீண்டும் உடலின்பம் போலாது, உயிரின்பம் என்பது பெறப்படும். எல்லா உயிர்க்கும் இன்பம் என்பது தானமர்ந்து வரூஉ மேவற் றாகும் - என்ற தொல்காப்பிய முதனுாற்படி, இன்பப் பசி உயிரியல்பு என்றும். அப்பசியாற்றல் இன்றியமையா ஒழுக்கமாவது என்றும், இயற்கையை மறித்தல் தலை வந்த குழவியைத் தாய்க் கருப்பையில் மீண்டும் அடக்கப் புகுவதையொப்ப நகையாடற்கு உரித்து என்றும், பன்மானும் பிறப்புண்மையைச் சீர்தூக்கித் தெளிந்த வள்ளுவர் காமத்துப்பால் வகுத்தார். வாழ நூல் செய்தார் வள்ளுவர் என்ப தற்கும், உலகு ஒட்டும் இயற்கைநூல் திருக்குறள் என்பதற்கும் காமத்துப் பாலினும் பிறிதொரு கரி வேண்டுங்கொல்!

இயற்கையுணர்ச்சிகளை வேரறக் களையும் ஆற்றல் நம்ம னோர்க்கு அப்பாற்பட்டது. நாம் முடிந்த எல்லையாகச் செயக் கூடுவது பொதுவில் நிற்கும் இயல்புகளை நல்வழிப் பாய்ச்சுவது: அல்நெறி தடுப்பது. புழங்கும் நீர் சாய்க்கடையில் ஓடி விழாது. மறித்துத் தோட்டப் பயிருக்குச் செலுத்தும் திருப்புநிலை வன்மை தான் நமக்கு உரியது. நன்றின்பால் உய்ப்பது அறிவு (422) என்பதுவே வள்ளுவ நெறி. இல்பாய இன்ப வேட்கையை நசுக்கப் புகின், உள்ளம் தாங்காது ‘உணர்ச்சி மீதுர்ந்து கூடாவொழுக் கங்களாய், தடுக்க வாராப் பெருங்கோளாறுகளாய், இயல்புணர்ச்சி முடிவில் திரிபுணர்ச்சியாய், வாழ்க்கை வற்றிப்போம் என்று அஞ்சித் தான், இருபத்தைந்து அதிகாரங்களாகக் காமத்துப் பாலை விரிவு செய்தார். பிறப்பின்பம் தூயது; அதனை நுகரும் நெறியும் துயதாதல் வேண்டும்’ என்று மக்கட்கு உணர்த்துவான், ஒரு மனை வாழ்க்கை அடிப்படையில் நுகர்வு விளம்பினர். இயல்பின்பத்தைச் சிற்றின்பம் என்று இழித்துரைப்பார்தம் கூற்று தமக்கு உடன்பாடன்று என்பதை, இனிது கொல் தாமரைக் கண்ணான் உலகு (1103), புலத்தலிற் புத்தேள் நாடு உண்டோ (1323