பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்ப வாழ்க்கை | 83

வலியுறுத்தும் நோக்கின. மக்களினத்துக்கே அகப்பொருள் இலக்கணம் வகுத்தோதிய இன்பத் தமிழினம், வள்ளுவர் காமத்துப்பகுதியை, மணப் பருவத்துக் கற்கதில், காமத்துப்பால் இலக்கியச் சுவைக்கு எழுதப்பட்ட தன்று ஆண்டு முரிந்த கிழப் பருவத்து மெல்லத் தகும் ஒய்வுப் பகுதியன்று. காதல் மணம் நுகரும் காளை குமரியர் கற்கத் தகும் பருவநூல்: ஒழுக்க நூல். ஆதலின் இள நம்பி நங்கையர் வாழ்க்கைத் தொடக்கத்து முதனுலாக வைத்து ஒருங்கிணைந்து திருக்குறள் காமத்துப்பாலைக் கற்பாராக. காமக்குறள் நுட்பம் கண்டு இன்ப நுட்பம் திளைப்பாராக.

இல்லறத்தீர்! வேட்கை வளர்க்கும் இன்பக் கூறுகளை - திருவள்ளுவர் நுனித்தறிந்த காம வோட்டங்களை - இனி ஆராய்வோம். ஆடவர் பெண்டிர் பல்லாயிரம் பேராகக் குழுமிக் கேட்கும் இவ்வவைக்கண், சில நுண்கூறுகளை மட்டும் நனி நாகரிகமாகச் சொல்லும் எண்ணம் உடையேன். காமத்துப்பால்ை அவரவர் தாமாகக் கற்பதுவே நாண் நெறியாகும்.

பிரிவு புணர்ச்சியின் பொதுவடிப்படை. இடையீடு இல்லா நாட்புணர்ச்சி கோழிப்புணர்ச்சி போன்றது. நாட்காமம் எடுத்ததற் கெல்லாம் வெகுளும் முன்சினம் போல வலுவற்றது; உள்ளத்திற்கும் உடலுக்கும் குடும்பத்துக்கும் கேடு பயப்பது. பிரிவால் அகமும் மெய்யும் அறிவும் திண்ணியவாம். பிரிவின் அகற்சிக் கேற்பப் புணர்ச்சித் தழுவலும், பிரிந்த வேட்கைக்கு ஒப்பப் புணர்ச்சி யின்பமும் பெருகும். கூட்டுப்பேரின்பம் பிரிவுப் பெருந்துன்பத்தால் முகிழ்க்கும் என்பது காம வள்ளுவம்; ஆதலின், காமத்துப்பால் இருபத்தைந்து அதிகாரங்களுள் பதினைந்து அதிகாரம் பிரிவுப் பொருளாக ஆசிரியர் அமைத்தார். சங்க விலக்கியத்திலும் பாலைப் பாடல்களே மிகுவரவின அல்லவா?

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன் ஒள்ளமர்க் கண்ணாள் குணம் (1125) கூடிய தலைவியின் குணங்களை, இவ்வாறு நினைந்து பார்க்கும் ஒரு தனி வாய்ப்பினைப் பிரிவு தலைவனுக்கு நல்குகிறது.

வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன் பைதல்நோ யெல்லாம் கெட (1266)