பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 வள்ளுவம்

செய்திகள். தலைவன் பூச்சூடுதலும், தும்முதலும், அஞ்சித் தும்மல் அடக்குதலும், காதல் மிகுதியால் இமையாது தலைவியின் உறுப்புக் களை நோக்கலும் கூட, ஊடற் காரணங்களாய் முடிகின்றன.

இன்பக் கிளர்ச்சி செய்யும் கருத்துக் கூர்மை மட்டும் புலவி நுணுக்கம் - அன்றுகாண்; அக்கூரிய சுவைக் கருத்தும் முன்னும் பின்னும் தொடராது. எழுதச் சீவிய கோலின் கூர்மை எழுதுங்கால் ஒடிந்து விடுதல் போல, ஊடலோடு தேய்ந்து அழிவதும் புலவி நுணுக்கம் ஆகும் என்று, இல்லற அறிஞர்களே! குறிக்கொண்மின் குடும்பப் பேச்சும் ‘காதலொருமை செய்யாப் பிற பேச்சும் அமளிக்கண் ஆகாப்பேச்சுக்கள் என்று துணிமின் அறிவிலா இன்ப முரிவன்றோ - அமளிப் புரட்சியன்றோ - வேண்டாப் பாயற் பேச்சு அன்றோ - பலகுடும்பத்தார்தம் தொல்லைக்கு மறைமுகக் காரணமாய் நிற்கின்றது. அழுக்காறுடையான் பிறர்மேல் கொண்ட தன் பகைக்குக் காரணம் ஏதேதோ சொல்லுமாப் போல, இன்ப முரிவு உற்ற கணவன் மனைவி ஊரார்க்கு ஏதேதோ புறக்காரணம் விளம்பு. குடும்பச் செய்தி தலையிடாதபடி, இலக்கியச் சுவையும் இன்பக் கொழுந்தும் துய்க்கும் அறிவுக் காதலர்களாக, சொற்கோட்டமும் மனக்கசப்பும் இல்லாக் காமக் காதலர்களாக, புலவி நுணுக்கத்தில் தமிழ்க்குடிப் பெருமகன் வள்ளுவர் அமைத்துக் காட்டினார். இந்நுட்ப வள்ளுவம் ஊடற்காலத்து நினையத் தகுவது.

நெடுநாட் புணராப் பிரிவுத் துன்பத்தானும், ஊடலின் உண்டு ஆங்கு ஒர்துன்பம் (1307) என்றபடி புணர்ச்சிக்கண் படும் புலவிச் சிறு துன்பத்தானும், முடிவில் ஒருமனை இன்பம் பெருகும் என்பது காமவொழுக்க நூலின் துணிபு. இங்ஙன் கற்பு நெறிக்கண் நின்று வாழ்க்கைப் பேரின்பம் திளைக்கும் உயர்தினை மக்கள் பிறர்மனை நயவார். பரத்தை நச்சார். அங்ஙன் நயத்தலும் நச்சலும் அறம் அல்ல என்பது ஒருபாலாக இன்பமும் அல்ல என்பது வெளிப்படை. காமத்தின் சிறந்த கூறு புணர்ச்சியன்று. ஊடல் ஆகும். புணர்தலின் ஊடல் இனிது (1326) என்றல் காண்க. அவ்வூடல் தானும் புணர்வுபோல் சிறிதளவே நிற்பின், துய்க்கும் இன்பம் சிற்றின்பமாய் ஒழியுங்காண்.