பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்ப வாழ்க்கை I 87 ,

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா (1329)

என்றபடி, நீடிய ஊடலே காமத்தின் உயிர்க் கூறாவது. இந்நெட்டுடல் அச்சம் மனக்குடி கொண்ட பிறன்மனை நயப்புக் கண்ணும், பொருள் நினைவுடைய பரத்தைத் தோய்வுக் கண்ணும் அமைதற் கில்லை. ஆதலின், ஊடல் சான்ற தன்னுரிமைப் புணர்ச்சியே - கற்புக் காமமே.-அறமும் ஆன்ற ஒழுக்கமும் ஆம் என்பது வள்ளுவம். திருக்குறளின் துணிவு இதுவாதலின், வாழ்வு தொடங்கும் பருவ நங்கை நம்பியரும் இல்லற வாழ்வினரும் காமத்துப் பாலை அறவொழுக்க நூலாக - குடும்ப நூலாக - கற்றல் வேண்டும் என்பது என் அறிவுரை.

கற்புடைய ஆண் பெண் முதற்கூட்டு, குடி’ எனப் பெயர் பெறும். காதலர் இருவரும் குடும்ப முதலுறுப்பினர் ஆகுவர்; குடும்பச் சுமைதாங்கிகள் எனப்படுவர்; குடும்பம் கணவன் மனைவியின் கூட்டுப் பண்ணை: பொறுப்பு வாழ்க்கை. கையெழுத்திட்டார் இருவருள் வலுவுடையானைக் கடன் சார்தல் போலக் குடிக்கடனும் ஆண் பெண்ணுள் ஆற்றலுடையாரைச் சாரும்.

அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும் ஆற்றுவார் மேற்றே பொறை (1027)

எனக் குடிச்சுமை விழிடம் காட்டுவர். இருவரும் அறிவும் திறமும் உடையராயின், குடும்பச் சுமைமட்டுமோ, சமூகத்தின் கொடிய வழக்க முதலாய இடிகளையும் தாங்கிக் கொள்வர்.

எல்லாரும் எல்லாத் தொழில்களையும் பார்ப்பது என்றல் செயல்நிலைக்குப் பொருந்தாது. இன்னார்க்கு இன்னவினை என்ற தொழிற் பகுப்புத்தான் அறிவுக்கும் நடைமுறைக்கும் ஏற்கும்: பலர்தம் தனித்தனி வினை முடிவில் ஒரு கூட்டுப் பயனை விளைக்கும். இஃது உலகியல். இல்லறம் இருவர் தொழிற்களம்: ஆதலின் கணவனும் மனைவியும் ஆளுக்கோர் தொழிற் பகுதியைப் பொதுவாக மேற்கொள்ளல் வேண்டும். இம் முறைப்படி அகவினை பெண் கடனாயிற்று: புறவினை ஆடவன் கடனாயிற்று. பொருள்வரும் வழிகளை இயற்றலும் ஈட்டலும் மகனுக்கு உரியன: தற்கொண்டான் வளத் தக்காள் (51) என்றபடி, காத்தலும்