பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,188 வள்ளுவம்

வகுத்தலும் மகளுக்கு உரியன. பிள்ளைகளின் உடல் வளர்த்தல் தாய்க்கும். உளம் வளர்த்தல் தந்தைக்கும் கடனாயின.

ஒரு பள்ளிக்கண் உள்ள ஆசிரியர்கள் இயல்பாகத் தத்தமக்கு உரிய வகுப்புகிளுக்குத்தான் பாடம் நடத்துவர். ஒராசிரியர் வாராதவன்று அவர் தம் வகுப்பை வந்தவருள் ஒருவர் மேற்பார்ப்பர். ஒரு பொது நிலையத்து அவரவரும் வரையறுத்த தத்தம் கடனை ஆற்றுவதுதான் இயல்பாயினும், அமயஞ் சமயத்துப் பிறர் கடனையும் ஏற்றுக் கொள்ளும் பரந்த மனப்பான்மை வேண்டும். குடும்பக் கடன் ஆணுக்கு இது, பெண்ணுக்கு இது என நுண்ணிதாக விதித்தற்கு இல்லை. ஏன்? அவர்கள் கூலிக்கு உழைப்பவர் அல்லர். குடும்பம் அன்புத் தொழில் நிலையம்.

தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல் (67) என்றதனால், மக்கட்குக் கல்வி வழங்கல் தந்தை கடன் எனச் சுட்டுவர். இதனால் தாய் கடன் இல்லை எனல் ஆமோ? ஒர்மின்! தமப்பன் பிற ஊர்களுக்குப் பிற நாடுகளுக்குப் பொருளிட்டச் செல்லுகிறான். அஃதன்றி இறந்து விடுகிறான். எனின், தந்தையோடு குழந்தைக் கல்வி நின்று விடுங்கொல் கணவன் இருக்கும் போதும் மறைந்த பின்னும், தம்மக்களைப் போற்றி அறிஞர்களாய் வளர்க்கும் அறிவுடைத் தாயார் பலரைக் காண்கின்றோம். வளர்த்ததாய்ச் சான்றோர் வரலாறுகளைக் கற்கின்றோம்.

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே என்றார் பொன்முடியார். தாய் கைவிட்ட காலை உளத்தோடு உடலையும் ஒம்பல் தந்தை முழுக்கடன் அன்றோ? ஆதலின் குடித்தொழிற் பகுப்பு விலக்கு மிகுந்த விதியுடையது; வரம்பிலா வரம்பு உடையது.

இன்று பரவிப் பெருகி வரும் ஒர் உலகப் போக்கால், பலர் மனமாசும் அறிவழுக்கும் உறக் காண்கின்றோம். ஒப்புப் பார்த்தற்கு உரிய வல்லாப் பொருளையெல்லாம் ஒப்பாக மயங்கிக்கொண்டு, உயர்வு தாழ்வு - மேல்கீழ் - கூறுவது. எதற்கும் ஒர் அடிப்படை பற்றாது கருத்துச் சொல்ல விரைவது. ஆணினம் செய்யும்