பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192 வள்ளுவம்

எனவும், புகழ் புரிந்த இல் (59) எனவும் வரூஉம் குறட்பகுதிகளால், பிலழவழிச் செல்லும் கணவனைத் திருத்தும் கடப்பாடு தலைவிக்கு உண்டு என்பது போதரும். வளத்தக்காள் (50) என்றபடி குடும்ப வரவுசெலவுத் திட்டம் வகுத்தலும், மனைமாட்சியும், தற்காப்பும், கொழுநனைப் பேணுகையும், குடிப்புகழ் விருப்பமும் எல்லாம், கல்வி அறிவிலாப் பெண்ணுக்கு நன்ன்ர் வாயா என்பது வெளிப்படை.

செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும் அறிவும் அருமையும் பெண்பால் ஆன

என்பது தமிழ் முதல்வன் தொல்காப்பியனார் காட்சி. ஆதலின் குடும்பப் பெண்ணுக்குப் பல்குணச் சால்பு வேண்டும். இல்லாள், மனைவி என்ற கிளவிகள் குடும்பவுறுப்பினருள் தலைவியின் தலைப் பொறுப்பினைச் சுட்டுவன. அஃதன்றி வீட்டுக்கு வெளியே செல்லாது, உலகம் பாராது, இடச் சிறு மனைக்குள் முடங்கிக் கிடப்பவள் என்பது பொருளன்று. கற்பு என்னும் பெயரால் உலக வறிவு பெறாதபடி, பெண்டிரைக் குறுகிய இடத்துக்குள் அடைத்துத் திரியவிடும் சமூகக் கதவைச் சிறை காக்கும் காப்பு எவன் செய்யும்’ (57) என்னும் கருத்துப் புரட்சிக் கோடரிகொண்டு, சுக்கு நூறாக்கும் தலைவர் வள்ளுவர். இன்று பெண்ணினத்துப் பெரும்பாலோர் ஒவ்வாச் சமூகப் பழக்கவழக்கத்துட் புதையுண்டு கிடக்கின்றனர்; உலகப் புதுவோட்டம் காணும் கண்ணிலர்: காலப் புத்தெண்ணம் தோன்றும் நெஞ்சிலர்; தூய புதுமை வேட்கும் கணவனோடு ஒழுகும் நடையிலர்: காரண காரியத்தோடு உரைத்தாலும் ஏற்கும் செவியிலர். செக்கு மாடு போல் சமூகப் பழந்தடமே சுற்றும் காலினராய், அவற்றையே வலிந்து பேசும் வாயினராய், ஆகாச் சடங்கு பற்றி அறிவு முன்னேற்றத்துக்கு இடையூறாய் நிற்கக் காண்கின்றோம். இவை அன்னோர் குற்றம் அல்ல; பெண்ணை அறிவுக்கு உதவா இனம் எனப் பழித்து ஒரு வீட்டுத் தொழுவத்து அடைத்துக் கல்விக் கண் கெடுத்த ஆகாக் கொள்கையாளரின் குற்றம், தூய புத்தறிவும், புத்துணர்வும், சமூகப் பழக்கம் பொருந்தாமை காணின் துணிந்து கடக்கும் புது நடையும், உலகம் காணும் ஒரு பெரு வேட்கையும், குடும்பக் கல்வியும், காமத்துக் கல்வியும் மக்கட் பயிர் வைத்து