பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்ப வாழ்க்கை 19s

இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தாம் வாழுநாளே என்ற நம்பியின் கூற்று திருக்குறட்கு உடன்பாடன்று எனினும், குழந்தைப் பேறுடைய குடும்ப வாழ்க்கை காதலர்ப் பிணைப்பும், அன்பூற்றும், கடமைப் பற்றும், முயற்சிப் பெருக்கும் தரும் என்பதில் ஐயமில்லை.

அன்பர்களே! நீவிர் விரும்பினும் வெறுப்பினும் குடி நலத்துக்கு ஆகா ஒரு வழக்கத்தினை ஈண்டுச் சுட்டத் துணிவல். எதற்கும் சோதிடம் பார்ப்பது பல் குடும்ப இயல்பாய் விட்டது. அறிவூட்டற்கு எழுந்த பல செய்தித்தாள்கள் கூட, மக்களின் சோதிட வெறியைப் பயன்கொண்டு விற்பனை பெருக்கி நாட்டினைப் பின்னும் நலிவிக் கின்றன. குழந்தை பிறந்த ஞான்றே, சோதிடனை அழைத்துவந்து, ‘குழந்தையின் ஆயுட்காலம் எவ்வளவு? இப்பிள்ளைப் பிறப்பால் குடும்பமும் பெற்றோரும் பெறும் நலம் தீங்கு என்ன? என்று வினவி அவன் வாய்ச்சொல் கேட்கக் காண்கின்றோம். கேடும் பெருக்கமும் இல்லல்ல” (1.15) என்ற உலகியல் அறியாது. நீ வந்த பின்தான் என் குடி கெட்டுப் போயிற்று’ என மனைவியையும், நீ பிறந்த பின்னர்தான் எங்கள் நிலை இவ்வாறாயிற்று எனக் குழவியையும் வையும் அன்பற்ற போக்கு இந்நாட்டில் ஊறிவிட்டது. இவ்வெல்லாம் குடிசெயல்வகை அல்ல என்று துணிமின்| திருக்குறட்படி ஒழுகுவார்க்கு முற்றும் பொருந்தா என்று எண்ணுமின்!

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்

நீள்வினையான் நீளும் குடி (1022)

என்றபடி, அறிவும் ஆள்வினையுமே குடிசெயல் வள்ளுவம் ஆம். சோதிடம் ஆகுக! விதிப்பற்று ஆகுக! சமூகப் பழக்க வழக்கம் ஆகுக! அரசுச் சட்ட திட்டங்கள் ஆகுக’ எனைக் கொள்கையும் ஆகுக! முயற்சிச் செலவு கெடுத்து மடிமையூட்டும் எதனையும் உதறுமின் அறிவோட்டம் தடுத்து இருட்படுத்தம் எதனையும் ஒட்டுமின்! அகத்துய்மை குறைத்து வஞ்சனை பெருக்கும் எதனையும் அகற்றுமின் முயற்சி அறிவு தூய்மைகட்கு இடையூறானவற்றைக் களைமின் அவற்றுக்கு உறு துணையானவற்றைப் பற்றுமின்| இதுவே வாழ்வியல்.