பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 96 - வள்ளுவம்

குடும்பம் என்பது கணவன் மனைவி மக்களைக் கொண்ட தாயினும், அப்பெயர்களோடு நின்று விடுவதில்லை. சுற்றுப் பொருளோடு முற்றும் தொடர்பிலா ஒரு தனிப் பொருள் உலகத்து இன்று. ஞாலத்து அஃறிணை உயர்திணைகளெல்லாம் கட்புல னாகவோ நுண்ணியதாகவோ தம்முட் சார்புடையன. நெருக் கத்துக்கு ஏற்பச் சார்பின் அளவில் வேற்றுமை யுண்டேயன்றி, அறவே சார்புத் தாக்குக்கு உட்படாப் பொருள் யாதும் இல்லை. ஓரிடத்து நீர் பக்கத்துக் கசிந்து செல்லுமாப்போல, ஒரு குடும்பத்தின் நல்லவும் தீயவும் உறவுக் குடும்பங்களைச் சார்ந்து பற்றும்.

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பது உம்

உண்பது உம் இன்றிக் கெடும் (166) என்பது ஆசான் காட்டும் உலகியல். இச் சுற்றம் விருந்தினும் வேறானது. விருந்து ஒக்கல் தான் என்றாங்கு (4.3) என்ற பகுதியில், ஒக்கல் என்பது சுற்றத்தைக் குறிக்கும். சுற்றத்தார் சிலபல பொழுது வேண்டா வம்புகள் விதைத்தாலும், சமூகக் குழிப்படுத்தி மேலேற வொட்டாது தடுத்தாலும், செல்வம் இருக்கும்போது நெருங்கி இல்லாதபோது எட்டிப் பாராவிட்டாலும், குடும்பத்துள் புகுந்து ஒற்றுமை கெடுத்தாலும், பயனுடைய முட்கிளை போல் ஒடியாது தழுவுதற்கு உரியோராவர்; காத்தற்குத் தக்கவர் ஆவர். தன்குடி காக்கப் பிறகுடி கெடுப்பவன் அறிவிலி, தன் ஒரு குடியையும் காக்கமாட்டாதவன் மடியன்; ஏனைக் குடிகட்குத் தீமை செய்யாது தன் குடி பேணுபவன் இயல்பன்; தன்குடியோடு பிற குடிகளையும் காப்பவன் சான்றோன். தன் குடியை ஒம்பிய பின்னும் மிகுந்த வலிவுடையவனுக்கு நெருங்கிய பிறகுடிகளை ஒம்பும் செயற்பரப்பு வேண்டும். இயல்பன் சான்றோனாக முன்னேறல் வேண்டும். ஒவ்வொரு குடும்பத்தானும் தன் உறவுக் குடும்பம் காப்பதை அடுத்த கடனாகக் கொள்வானேல், அரசுப் பாரம் பல்வகையால் குறையும். நாட்டு நலன் இயல்பாக எங்கும் பெருகும். ஒரு சுற்றக் குழுவில், அங்ஙன் பல்குடியையும் தழுவ வல்ல ஆற்றல் நிறைந்த சில குடும்பத்தாரேனும் இல்லாமல் இல்லை. பின் இல்லாதது யாதோ எனின். அச் சிலசெல்வக் குடும்பத்தாருக்குச் சுற்றந் தழுவும் தூய நல்லுணர்ச்சி. ஏதிலார் ஆரத் தமர் பசிப்பர் (837) என்றபடி,