பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவ அரசு - - 2 (; 3

அழிவிற்கென, மக்கள் செய்துபோம் நாட்செயல்கள் தவநளிைச் சிலவே காண். நாளோ, வாரமோ, திங்களோ, ஆண்டோ, வாழ்நாள்வரையோ, வழிவழியோ, நூற்றாண்டோ, உலக நீடுழியோ எனவாங்கு, எதிர்கால வோட்டமே நம் வினைகளுக்குள் பொதிந்து கிடக்கின்றது. வருங்காலத் தூயெண்ணமே அறிவு என்பது வள்ளுவம்; ஆதலின், மக்கள் யாரும் எதிரது நினையும் நிகழ்காலச் செய்கையர் என்பது தெளிவு.

தத்தம் ஒரு வாழ்க்கைப் புறச் செயல்களுக்கே இத்துணை வருங்கால நோக்கு மக்கள் பாய்ச்சுவராயின், வள்ளுவர் அனைய சான்றோர்கள் உட்கொண்ட எதிர்காலம் ஒரிரு நூற்றாண்டு அளவினதோ? ஒரீராயிரம் அளவிற்றோ? கல்வித் திட்டப்படி, எழுதும் பாடநூல் போல்வதன்று திருக்குறள். ஒரு பரிசில் வாங்கும் உணர்ச்சித் தூண்டுகையால், பிறந்த நூலன்று திறக்குறள். அண்மைப் புகழ் ஈட்டும் நோக்கொடு, தோன்றியதன்று திருக்குறள். இந்நூல் தங் காலத்தார்க்கு மட்டும் - ஒர் ஐம்பதாண்டுப் பொழுதுக்கு மட்டும் - எனக் கருதினாரல்லர். மனம் எனஒரு பொருள் உளகாறும், மக்களென ஓரினம் வாழும் வரையும் திருக்குறள் செல்லல் வேண்டும்; நின்று நிலைத்து வழிகாட்ட வேண்டும் என்ற வழி வழி நீளெண்ணமே வள்ளுவர்க்கு இருந்தது. ஆதலின், காலத்து வீழ்ந்து ஒழியும் புறப்பொய்க் கருத்துக்களை அகற்றி, என்றும் நிலைக்கும் மெய்யெண்ணங்களை அடிப்படையாகத் தழுவி, அறிவுக் கண் நீடுழி பரப்பிப் புத்தறங்களையும் கண்டு, காலக் கோட்படா நிலைநூல் யாத்தவர் வள்ளுவர். இவ்வுண்மைக் கூற்றுக்கு அவர் ஆண்ட உவமைகளே ஒரு பெருங்களி. வையத்து இறந்தாரை எண்ணிக் கொண்டற்று’ (22), கனியிருப்பக் காய் கவர்ந்தற்று’ (100), வெள்ளத் தனைய மலர் நீட்டம் (595), துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே (557), பைங்கூழ் களை கட்டதனொடு நேர்’ (550), நிலத்தியல்பால் நீர் திரிந்தற்றாகும் (452), தலையின் இழிந்த மயிரனையர் (964) என வரூஉம் எண்ணிறந்த உவமைகள் நிலை சான்றன; நின்று விளங்குவன. தங் கருத்துக்கள் மக்களினம் உள்ளளவும் விளங்க வேண்டும் என்பதாலன்றோ, எளிய இனிய நிலைத்த காட்சிப் பொருள்களை உவமை செய்தனர்.