பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவர் நெஞ்சம் 17

ஒர்க. ஆதலின், நோக்கு என்பது கண்பார்வையல்லா மனப்பார்வை எனப் பொருள்படும்.

சொல்லிடை நோக்குதல் எங்ஙனம்? தொல்காப்பிய வுரையின் பேராசிரியர், எழுநூறு ஆண்டுகட்கு முன் வாழ்ந்தவர், இது பற்றி ஒரு குறிப்பு எழுதியிருக்கிறார். கேட்டார் மறித்து நோக்கிப் பயன் கொள்ளுங் கருவி என்பது அவ்வுரையாளர் வரைந்த குறிப்பு. இவ்வாறு ஏன் சொன்னான்? இப்படி ஏன் சொல்லிற்றிலன்? இவ்வண்ணம் மறித்துத் தானே வினவிக் காண்பதால், Glss6luJIT&T நெஞ்சம் வெளிப்படும் என்பது இக்குறிப்பின் விளக்கம். ஆதலின், வெளிப்பட்ட சொல்லை ஆசிரியன் போற் கருதி, வினவி வினவித் தன் நினைவுக் கருவி கொண்டு அவன் நினைவுப் பொருளைக் கல்லியெடுக்க வேண்டும். இனிவரும் அனைத்துச் சொற்பொழிவிலும் நோக்கு என்னும் இவ்வரிய தனியுண்மை பரந்து விளங்கக் காண்பீர்கள்,

பேரன்பர்களே! பரப்பும் வனப்பும் குளுமையும் செறிந்த இக் காவனச் சோலைக்கு இன்றுகாலை ஒன்பது மணிக்கு வந்தேன். அவ்வமயம் பல பெருமக்களைக் கண்டேன்; உவந்தேன். நம் இந்தியப் பிற பகுதித் தமிழர்களும், இலங்கை மலேயா தென்னாப் பிரிக்கா முதலாம் பிறநாட்டுத் தமிழர்களும், பெண்களும் ஆண்களு மாய், குழுஉக் குழுஉவாய்த் திருக்குறட் சொற்பொழிவு கேட்க அவாவி வந்துளர். ஒரு மொழித்தாய் வயிற்றுப் பிறந்த நம் மக்கட்கெல்லாம், தாய்த் தமிழகத்து வாழும் பேறுடைய நாம் குடும்ப நல்வரவு கூறுகின்றோம். தமிழ் மதிக்கும் பிறமொழிப் பெருமக்களும் பலராய் இவண் குழுமி யுளர். அவ்வன்பர்க்கெல்லாம் நாம் பெருமைசான்ற நல்வரவு கூறுகின்றோம். ஞாலத்துப் பரந்து வாழ் தமிழரனைவரையும் ஒருங்கு கூட்டி வைக்கும் மொழியாற்றல் நிரம்பிய வள்ளுவர்க்கு நம் பெருஞ் செய்ந்நன்றி உரியதாகுக, செயலுக்கு வரும் வாழ்க்கைஅறங் கூறி, எவ்வகை மக்களையும் உய்விக்கவும் உயர்விக்கவும் உளங்கொண்ட வள்ளுவரை நாம் நன்றி மறப்போமா? நன்றி மறக்கவில்லை; ஆனால் அதனைக் காட்டவேண்டிய நன்முறையை மறந்தோம். அவரைப் பெருமைப் படுத்தினோம்; அஃது எஞ்ஞான்றும் செயற்பாலது; ஆனால் அங்கன் ol. 2, . -