பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 வள்ளுவம்

பான்மைக் கட்சியும் முதலமைச்சனைத் தேர்ந்தெடுக்குமே யன்றிப் பின்னமைச்சர்களை யெல்லாம் தேர்ந்தெடுப்பதில்லை. அன்னோர் எடுப்பு முதலமைச்சன் உரிமை. ஆதலின். குடியரசின்கண்ணும் தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல் என்ற வள்ளுவ அதிகாரங்கள் மிக நனி பொருந்துவன.

நாட்டுக்குத் தலைவன் ஒருவன்: அமைச்சர் எண்ணத்தகும் சிலர். இன்னோர் மேல்நிலையிலிருந்து கண்காணிப்பும் கொள்கை வகுப்பும் சில பெருவினைகளும் செய்பவர்களே யொழிய, அரசு வண்டியை உயரவிருந்து ஒட்டுபவர்களே யொழிய, மெய்யாக அதனை இழுப்பவர்கள் அல்லர். நுகத்திற் கழுத்துக் கொடுத்துப் பாரந்தாங்கி அரசுச் சகடத்தை இயக்கும் காளைகள், கீழ்நிலைப் பதவியாளர்கள் அல்லரோ? இன்று ஒரு கட்சி வரும் போகும். அமைச்சர்கள் வருகுவர்; போகுவர். பாராளுமன்றங்கள் ஆண்டிற்கு இருமுறை நடக்கும்; கலையும். இந்நிலையா அரசியலுக்கு இடையில், நிலைத்திருந்து இடையறாது அரசு இயக்குநர் ஊதியம் பெறுங் வினைக்குழுவினர் அல்லரோ? ஆதலின், நாட்டுத் தலைவனும் அமைச்சர்களும் அரசாட்சியின் அடித்தளத்தை உணர்ந்து, தக்க ஆட்களை அரசுவினை செய்வார்களாக அமர்த்தல் வேண்டும். மிக்க விழிப்போடு அலுவலாளர்களைப் பொறுக்க வேண்டும் என்பது அரசு வள்ளுவம்.

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை யெல்லாம் தரும் (507)

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான் சிறந்தானென்று ஏவற்பாற் றன்று (515)

என்பன ஆகாமை காட்டும் தேர்வுக் குறள்கள். அறிவுடைய அன்பனுக்கு அரசுவினை கொடுக்க தனக்கு வேண்டியவன் என்பதற்காக, அறிவிலாதானை வினையில் அமர்த்தற்க எனக் காதலாட்சி மறுப்பர் வள்ளுவர். தெரிந்து தெளிதல், தெரிந்து வினையாடல் என்ற ஈரதிகாரங்களும் ஊழியர்கள் பற்றி நிரம்பிய கருத்துக்கள் உடையன; எவ்வகை அரசியலுக்கும் இன்றியமையா அறிவூட்டுவன.