பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவ அரசு 21 |

பாகித்தான் காசுமீரத்துப் படை தொடுத்தகாலை, வாளாவிருக்க முடிந்தது கொல் எதிர்ப்படை விடுத்து அமர் செய்தது இயல்பன்றோ உலகத்து அமைதி அமைதியென மூச்சுக்கு முந்நூறு மடங்கு வாய்வீசா அரசு யாதும் இன்று; எனினும், எல்லா அரசும் நாள்தோறும் படைபெருக்கம் மிகுக்கவும், நுணுகிப் பரந்த புதுக் கொலைக் கருவி காணவும் விரைவதைக் காண்கின்றோம். அணுக் குண்டும் நீர்க் குண்டும் பிறந்தது இவ்வமைதிப் பறைக் காலத்தன்றோ இவற்றால் எல்லாம் நாம் அறியக் கிடப்பது யாது? குறிக்கோளுண்மை என்பது ஒன்று. நடைமுறை யுண்மை என்பது மற்றொன்று. இவ் விரண்டும் தம்முள் முரணல்ல. குறிக்கோள் முன்னோக்கிய அறிவுநிலை பற்றியது; நடைமுறை அப்பொழுதைச் செயல்நிலை தழுவியது.

செயற்கை யறிந்தக் கடைத்தும் உலகத்து

இயற்கை யறிந்து செயல் (637) என்பது உலகநடை வேண்டும் குறள். ‘உலகத்தோடு ஒட்ட ஒழுகல் (140), உலகத்தோடு அவ்வது உறைவது அறிவு (425) என இந் நடைமுறைத் தழுவலைப் பலபடியான் வற்புறுத்துவர்.

ஒரு பெருங் குறிக்கோள், கொண்ட அன்றே முழுதும் செயலாகுவதில்லை; அன்றே ஆதல்வேண்டும் என நினைப்பது அறிவுப் பிழை. கருப்போல் சிறிது சிறிதாகச் செயல் வளர்ச்சி பெறுவதுதான் இயல்பு. திருக்குறள் முழுதும் கற்க வேண்டும் என்று மனத்து நினைப்பது எளிது; நூலெடுத்துக் கற்கப் புகும்போது தான், சொல் முட்டுப்பாடும் பொருளறியாமையும் குடும்ப இடைப் பிறவரலும் உண்டாகும். ஒருநூறு கற்றொலைவு நடக்க வேண்டும் என உள்ளுவது எளிது; நடக்க அடி எடுத்து வைக்கும்போதுதான், கல்லும் முள்ளும் குத்தும்; காற்றும் மழையும் தாக்கும்; நீர் வேட்கையும் உடல் நோவும் வரும். இமயமலைத் தனிச்சிகரத்தை மிதிக்க எண்ணுவது எளிது; பனிமலைமேல் ஏறும் போதுதான் கால் வழுக்கும்/மூச்சடங்கும் வளிப்பூதம் விலங்கும். தமிழ் எம்மொழிக் கலப்பும் இன்றி உயர்தனிச் செம்மொழியாய் இன்றும் இலங்கல் வேண்டும் எனத் துணிதல் எளிது; பரந்து விரிந்த பல்துறைப் பொருள்களை நம் தாய்மொழிக்கண் எழுதிப் பேசும் போதுதான்,