பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 வள்ளுவம்

உணர்ச்சியே பீறிட்டு நிற்கின்றது. இப்போர் அமெரிக்காவிலோ ரசியாவிலோ தொடங்கியிருக்குமேல். இதுவரை எவ்வகையானுரு ஒரு தீர்வு கண்டிருப்பரன்றோ? தன்னாட்டுவீரர்கள் அழியப்படாது என்பதற்கன்றோ, அமெரிக்கர் சப்பானில் அணுக்குண்டு எறிந்து அந்நாட்டு மக்களை அழித்தது; ஆதலின், உலகம் ஒன்றென்பது உம் மக்கள் ஓரினம் என்பது உம், நடைமுறை யுண்மைகள் அல்ல என்பது பெறப்படும்.

பிற அரசுகள் தலையிட்டிராவிட்டால், தென் கொரிய வடகொரிய மக்கள் விரைவில் ஒரு தீர்வு கண்டிருப்பர். இன்று அமைதி செய்து கொள்ளும் உரிமை அன்னோர்க்கு இல்லை. உலகவொற்றுமை என்று விளம்பிக்கொண்டு. பல நாடுகள் தலையிட்டதன் விளைவு இது. இரு குடும்பத்தார் அடித்துக் கொண்டால், ஊர்க் குடும்பங்களை எல்லாம் கூட்டித் தீர்ப்புக் கூறுமின் என்று வேண்டல் நகைப்பிற்கு உரியது. மேலும் குழப்பம் தருவது. இந்நிலையையே கூட்டு நாட்டவிையிற் காண்கின்றோம். இருநாட்டுப் பூசலை அறுபது நாட்டின் முன் வைப்ப, ஒவ்வொரு அரசும் உலக நலம் நோக்கிச் சீர்தூக்காது, அச்சிக்கலைத் தன்னாட்டு நன்மைக்கு எங்ஙனம் பயன் கொள்வது? என்று விழிப்போடு உரைசெய்யக் காண்கின்றோம். கணவனோ மனைவியோபிள்ளைகளோ ஒருவர் குறையை மற்றவர் தன்னலமாக்கிக் கொள்ளும் இவ்வுலகில், ஒரரசினர் தங் குடிகளைக் கூட ஒன்றெனத் தழுவாது சாதி மதம் நிறம் கொள்கை மேலிட்டு நசுக்கும் இவ்வுலகில், ஒரு நாட்டுள்ளும் ஒரு கட்சியின் பிளவைக் கண்டு பிற கட்சிகள் களிக்கும் இவ்வுலகில், ஒரரசு பிறிதோர் அரசின் குழப்பத்தை - சிக்கலை - வறுமையைத் தன்னலமாகப் பயன் கோடல் அரிய இயல்பு அன்று: பரந்து காணப்படும் நடைமுறை யுண்மையாகும்.

வள்ளுவ அரசியல் எதிர்காலக் குறிகோளும் நிகழ்கால நடப்பும் கொண்டது: உயர்ந்த எண்ணமும் உலகப் போக்கும் உடையது. அறிவுக்கண், உலகக் கண் என்ற இரு நோக்கும் வாழ்வார்க்கு இன்றியமையாதவை என்பது வள்ளுவம். இவ்விருநிலை அடிப்படையிற்றான் திருக்குறளை யாத்தார் என்பது என் துணிபு: ஆதலின், நாம் அதனை இம்முறையில் கற்போமாக. உலகம்