பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவ அரசு 215

ஒன்றெனப் பறை சாற்றினும், கூட்டு நாட்டவை அமைந் திருப்பினும், உள்ளோடுகின்ற நடைமுறை அரசியலை ஆராய் வார்க்கு, வள்ளுவர் பகை மாட்சி அதிகாரம் இன்று பெரிதும் மெய்யாகின்றது என்பது தெளியப்படும்.

படைக் குறைவு உலக அமைதியைத் தாராது; படைப் பெருக்கமே அதனைப் பயக்கும். பெருக்கம் இருப்பின் பகைவர் அஞ்சிப் போர் செய்யாது ஒடுங்குவர் என்று அமெரிக்க அறிக்கை விடாது கூறும். எம்பால் அணுக்குண்டும் உண்டு; பிற அழிவுப் பெருங்கருவிகளும் உண்டு என்று பகைவர் துணுக்குற ரசிய வெளியீடு குறிப்பிடும். நாங்களும் அணுக்குண்டுத் தேர்வு நடத்தினோம் என்பர் ஆங்கிலேயர். இந்தியாவின் படைத் தொகையைக் கண்டு பாகித்தானும் தன் போராரவாரத்தைக் குறைத்துக் கொண்டது. மூன்றாவது உலகப்போர் இன்னும் நிகழாமல் இருப்பதற்கு, ஒரு பெருங் காரணம் எல்லா நாடுகளும் படைபெருக்கி வைத்திருப்பதுதான் என்பர். போர் நிகழின், இருதிறப் பகை நாடுகளும் முற்ற அழியும் என்னும் அச்சமே அமைதிக்கு ஏது என்பர். யாண்டும் காணப்படும் இப்போக்கு வள்ளுவர் கண்ட நடைமுறை அரசியலாகும்.

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும் பகைவர்கண் பட்ட செருக்கு (87.5) இவ்வரசுக் குறளின் உண்மை இன்று நன்கு பொருந்தவில்லை கொல் வருவாயிற் பெரும் பகுதியைக் காப்புத் துறைக்கண் எல்லா நாடுகளும் வாரியிறைப்பதுவே இக்குறளுக்குப் பொய்யாச் சான்று பகரும்.

சுருங்கச் சொல்லின், பிறநாட்டு நட்பு, தன்னாட்டுப் படைப் பெருக்கு என்ற இவ்விரண்டும் வள்ளுவ அரசின் வெளிநாட்டுக் கொள்கைகள் என்று அறிக. வள்ளுவர் பொய்யில் புலவர்; அவர் சொல்லிய வெல்லாம் பொய்யா என்று வரிந்து கட்டிக் கொண்டு நிறுவ முயறல் என் உட்கிடையன்று. அங்ஙன் நீவிர் நினைப்பிரேல், அது பெரும் பிழை. உடலுக்குப் பிணியும் பிணிக்கு மருத்துவமும் உளவாதல் போல, மனத்துக்கு மாசும் மாசுக்குத் திருக்குறள் மருந்தும் இருப்பது இயல்பு. நாடு, நிறம், பிறப்பு முதலாய இயற்கைத்