பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 வள்ளுவம்

பெருமைப்படுத்தக் கையாண்ட முறைக்கண் சிறுமை செய்தோம். அவர் திருக்குறளைப் பன் மானும் வரப்பண்ணிக் கற்றோம். நல்லதோர் தொடக்கம் செய்தோம். அதனாற் பயனென் குறள்கள் நாள்வாழ்வில் ஒட்டுமா? உலகியலிற் பொருந்துமா? இவற்றுப்படி நடந்தால் இழப்பல்லது ஊதியம் உண்டா? என ஒவ்வாதன உளறி ஒராண்டுக் குழந்தை வாய்ச்சோறு போலச் செய்ய மறுத்தொழிந் தோம்.

வாய்மைக் கழகத்துச் சார்பில் நிகழும் இக்கூட்டம் இன்றுமுதல் பன்னிரண்டு நாட்கள் தொடர்ந்து நடைபெறும். வெயில் சுடவும் வேர்க்கவும் நான்கு மணிக்குத் தொடங்கிப் பசி சுடவும் ஆள் சுருங்கவும் பத்து மணிக்கு முடியாது முடியும் கூட்டங்களையும், கேட்போர்தம் உள்ள நிலையும் உடல் நிலையும் கணித்தறியாப் போக்குடைய கூட்டங்களையும் கேட்டுக் கேட்டு நன்மக்கள் உவர்ப்புற்று வருகின்றனர். நம் கழகம் அப் போக்கு வழிச் செல்லாது. காண்மின் மென்குளிர்காற்று கரு முதிர்ந்த தாய் போல் உலவி வர, உயிர்கள் இன்புறும் சாயுங்காலம் ஆறு மணிக்குத் துவங்கி, கூடியது ஒரு மணியளவு நிகழ்ந்து, ஏழு மணிக்குள் நம் கூட்டம் நிறைவெய்தும் என அறிவிக்க விரும்புவல். திறந்த நெஞ்சும் மலர்ந்த முகமும் உடையராய், உண்டற்கண் உரையாடல் போல, நாமும் இனிது பழகுவோமாக. உங்கள் பற்றும் என் ஆர்வமும் உங்கள் அமைதியும் என் பணிவும், உங்கள் மலர்ச்சியும் என் உவகையும், நம் தூய எண்ண்மும் எண்ணத் திட்பமுமெல்லாம் என் செயவேண்டும் ஞாலம் புகழும் திருக்குறளுக்கு நம் வாழ்க்கையை இலக்கியமாக்க வேண்டும். நம் நாள் வாழ்வு ஒழுக்கக் குறள் வாழ்வாதல் வேண்டும்.

என் உள்ளம் பொங்கும் ஒர் உவகை யுணர்ச்சியை அடக்கி வையாது இன்னே சொல்ல விழைவல். கேள்விப் பெருமக்களாகிய நீங்கள் கூட்டங் குறித்த காலத்திற்குக் கால் மணிப் பொழுது முன்பாகவே வந்து விட்டீர்கள். வந்த ஒழுங்கொடு பின்னே நின்று கொண்டிராது, எல்லோரும் அமர்ந்தும் இருக்கிறீர்கள். வாய்மைக் கழகம் காட்டும் தொடக்கப் பண்பிது. சித்திரப் பாவையின் அத்தகவு அடங்கி என்ற ஒழுங்கு இந்நாள் மாணாக்கரிடத்து அவ்வளவு