பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 வள்ளுவம்

வேலன்று வென்றி தருவது மன்னவன் கோலதூஉம் கோடாது எனின் (546)

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணிரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை (555) என்ற குறள்களால், படைகொண்டு குடிகளை ஆளப்படாது; முறைகொண்டு ஆள்கைவேண்டும் என்பது உம், கண்ணகிபோல் மனங் கொதித்து ஒருவர் கொட்டிய கண்ணிரும் அரசு புரட்டும் படையாய் விடும் என்பது உம் வெளிப்படுத்தினார். கொலையாளி பலரைக் காட்டிலும், தன்.மக்களை எஞ்ஞான்றும் கலக்கஞ் செய்து தீமை புரியும் ஒரரசு மிகக் கொடியது என்று முடிவு கூறினார்.

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் களைகட் டதனொடு நேர் (550)

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு

அல்லவை செய்தொழுகும் வேந்து - (551). என்ற குறள்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிற்பன. நிறுத்தியதன் குறிப்பு என்னை? ஒரரசு கொலையாளரைக் கொலை செய்வது களை பறிப்பதை ஒக்கும் என்றால், குடிகளையெல்லாம் வாழ் வறுக்கும் அவ்வரசினை ஒழிப்பது பயிர் அழிக்கும் அறியா உழவனை அகற்றுவதை ஒக்கும் அன்றோ? ஆதலின், அல்லவை செய்யும் அரசு கெடுதற்கு உரியது என்பது குறிப்பு. பொறாமை யுடையவன் பகைவரின்றியும் தானே அழிவான் என்பது போலக் கொடுங்கோல் வேந்தும் தண்பதத்தான் தானே கெடும் (548), ‘ஒருவந்தம் ஒல்லைக் கெடும் (563) என இயற்கை யழிவு தெரிப்பர். அரசாற்றலைத் தலைவனும் அமைச்சரும் வினையாளர்களும் தன்னலத்துக்கு ஆளல் கொடுங்கோன்மை; மக்கள் நலமே அரசின் முழு நோக்கம் என்பது வள்ளுவம். இறைமாட்சி. செங்கோன்மை, கொடுங்கோன்மை, வெருவந்த செய்யாமை அதிகாரங்கள் இவ்வுண்மை காட்டுவன.

அரசுத் தலைவனை ஒரு நாட்டின் மக்கள் தலைவன் என்றோ. ஆன்று அவிந்து அடங்கிய சான்றோன் என்றோ பொதுவாகச் சொல்லுதற்கு இல்லை. அரசின் உள்ளும் புறமும் தலைமை