பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவ அரசு 219

சான்றோர், நேரு பெருமகன் போலும் தவச்சிலரே யாவர். கல்வியானும், அறிவானும், ஒழுக்கத்தானும், பரந்தோங்கிய புகழானும், செயற்றிறத்தானும் செல்வாக்குடையோர் குடிமக்களுள் பலரிருப்பர். அரசுத்தலைவன் மக்கட் பெரியோர்களை என்றும் தழுவிக் கொள்ளல் வேண்டும்; அன்னோர் செவி கைப்பக் கழறினும் பொறுத்துக் கேட்டொழுகும் அடக்கம் வேண்டும்; தன்னை ஆட்சித் தலைவனாக எண்ண வேண்டுமே யொழிய, நாட்டுத் தனிப்பெருந் தலைவனாக மயங்கிப் படையாற்றலை நம்பிக் கிடத்தல் ஆகாது என்பது வள்ளுவ அரசியலின் உள்ளோட்டம். பெரியாரைத் துணைக்கோடல், பெரியாரைப் பிழையாமை என்ற அதிகாரங் களால், அரசுத் தலைவன் பற்றுக்கோடும் அழிவும் சுட்டுவர். அவன் உண்மைப்பெரியோனல்லன்: அவனினும் பெரியோர் Qgr உளர் என்று நினைவுறுத்துவர்.

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும் (899) என்பதனால், குடிப்பெரியோர் திருக்குறளரசின் உள்ஸ்ரீப்பினர் என்பது தெளிவு.

இடிப்புரையாளர் செங்கோலரசிற்கு இன்றியமையாதவர் என்பது வள்ளுவம். தக்காரும் சேர்வ்து நாடு (731) என்றல் காண்க. இடிப்பாரை விலக்கி முழுதும் ஒத்துதுவாரைத் தழுவும் அரசு கொடுங்கோலாய் இழியும்; நிலக்குப் பொறையாய்விடும். ஆசிரியர் வேண்டும் இடிப்பாளர், பல் குழுவும், பாழ் செய்யும் உட்பகையும், வேந்து அலைக்கும் கொல் குறும்பும் (735) என்ற இனத்திற் சேராதவர்; நாட்டன்பினர்; இன்று காணும் எதிர்க் கட்சியாளர். குடிப்பெரியோரையும், இடிப்பறிஞரையும் கேண்மை கொள்க’ என்பது எவ்வகை அரசியலுக்கும் உரிய வள்ளுவம் அன்றோ?

தக்கார் இனத்தனாய்த் தானொழுக வல்லானைச் செற்றார் செயக்கிடந்தது இல் (446)

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானும் கெடும் (448)