பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவ அரசு 223

இந்தியக் குடியரசில் தேர்வுக்காலத்து மக்கள் மதிக்கப் படுகின்றனர்; நாள்தொறும் இகழப்படுகின்றனர். *4Jr வினையாளர்கள் தேர்வில் வென்ற மாற்றாளிகளைத் தம் அலுவலகத்து வரவேற்கின்றனரே யன்றி, அன்னோரைத் தேர்ந் தெடுத்த உரிமைக் குடிமக்களைக் கால்கடுக்க வெளியே நிறுத்து கின்றனர்; இன்று போய் நாளை வா என்று கால் கடுத்தபின் நாள்தோறும் ஏவுகின்றனர்; விளக்கேற்றிய தீக்குச்சியைப் போல் அவமதிக்கின்றனர். இந்திய விடுதலையால் இருபத்தொரு வயது வந்தோர் பெற்றது தேர்வுரிமை. அனைத்து மக்களும் பெறாதது மதிப்புரிமை. வழக்கு மன்றங்களும் அலுவலக வாயில்களுமே போதிய கண்காட்சியாகும்.

பொதுவாய் மக்கள் அரசியற்கண் அமைச்சர்களோடு தொடர்பு கொள்ள இடமில்லை. கீழ்நிலைப் பதவியாளரொடுதான் மிகுதியான தொடர்பு நாள்தோறும் கொள்ப, ஒர் அலுவலகத்து முன்னிற்கும் வாயிலோன் செய்யும் அட்டுழியம் கொஞ்சநஞ்சமா? அவன் விடைகொடுத்தாற்றான் மேல் வினையாளரைப் பார்க்க முடியும். மேல் வினையாளரோ திடீரென இருக்கை விட்டு வெளி வந்து, காட்சிக்கு எளியராகி ஆண்டு நிற்கும் கால்நடை யனைய மக்களைப் பார்த்து நீவிர் வேண்டுவது என்ன? என்று வினவார்; வினவுவது பெருமைக் குறைவு எனக் கருதுவார். ஆதலின், விரைந்து காரியம் முடிக்கும் பொருட்டுக் கையூட்டுக் கொடுப்பது இன்றியமையாதது ஆகின்றது. வாயில் காவலனுக்குச் சில்லறை ஈந்தால், நம்மை அழைத்துக் கொண்டு மேல் வினையாளன் முன்னிறுத்தி, வேண்டியது சொல்லிச் செல்வான்; வினை முடிந்து மீளுங்காலைப் பின்னும் சில்லறை வீசினால், என்று செல்லினும் ஆசையால் மீண்டும் நன்றி காட்டுவ்ான். இஃது பரந்து காணப்படும் இழிமுறை.

கையூட்டும் வங்குவானும் குற்றவாளி: கொடுப்பானும் குற்றவாளி என்று சட்டம் செய்வதால், இக்கொள்வினை கொடுப்பு வினை நின்றுவிடாது காண். ஏன் வாங்குகின்றான்? ஏன் கொடுக் கின்றான்? என்பதை ஆராய வேண்டும். யாரும் பொருள் வாங்க விரும்புவர்; கொடுக்க விரும்பார். ஆதலின் மக்கள் கையூட்டு