பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 வள்ளுவம்

வழங்குதற்குக் காரணம் என்னை என்று துருவத்தகும். வாழ்க்கை பலர்க்கு வணிகம் போல்வது. வருவாயும் செலவும் ஒத்துப்பார்ப்பது பொதுவியல்பு. காரியம் சுணங்கினால், ரூபாய் நூறு இழப்புவரும் எனத் தெளிந்து தொலையினும் தொலைக என்று ரூபாய் ஐம்பது கையூட்டளிக்க மனம் ஒப்புகின்றது. கையூட்டளிப்பது சிறுமை; வினை கெடினும் கெடுக’ என்று துணிவதுதான் ஒழுக்கமாயினும், ஒரிருதடவை அங்ஙன் விட்டுக்கொடுக்கலாம். அரசாட்சியின்கண் தொட்ட இடமெல்லாம் பணத்துக்கமாக இருப்பின், மக்கள் யாது செய்வர் ஆட்சியின் இயல்பு என்று ஒதுக்கி உலகத்தோடு ஒட்ட ஒழுகுவர்.

இவ்வுண்மையை வள்ளுவர் அறிந்தவர். தூங்காமை - வினைச் சுறுசுறுப்பு - அரசின் ஒழுக்கமெனத் தெளிந்தவர். மெத்தென விரைந்தோடும் கால்வாய் நீரில் அழுக்குத் தேக்கத்துக்கு இடமின்மை போல், தேங்காது மக்கள் வினையை உடனுக்குடன் முடித்துக் கொடுக்கும் அரசியலில் கையூட்டுக்கு வாய்ப்பில்லை என்று கண்டவர்.

நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்

கோடாமை கோடாது உலகு (520)

என நல்லரசிற்கு அடிப்படை காட்டினர்; ஆதலின் நம் பேற்றால் வள்ளுவத் தோன்றல் இன்று அமைச்சராக இருப்பரேல், நாட்டின்கண் தமக்குரிய அலுவலகங்களை யெல்லாம் சென்று சென்று துங்காமை யுண்டா? எனக் கட்டுக்களைப் புரட்டிப் பார்ப் பார். துக்கம் கண்டாரேல், முறை பிறழ்ந்தாற்போல் துடிதுடித்து, பின்னும் நீட்டிக்காவாறு அன்றே மக்கட்குக் காரியம் முடித்துக் கொடுப்பர். யாது பொறுப்பினும் பொறுப்பர்; தூங்காது செய்யத் தகும் மக்களின் வேண்டுதாள் கட்டாகத் தூங்குவதைப் பொறார்.

இன்று நம் அமைச்சர்கள் நாட்டினைத் தம் இல்லமாகக் கருதவில்லை. ஊர்சுற்றுங்கால் தம்துறை வினைக்களங்களில் நுழைந்து அமர்ந்து பலவற்றையும் நேரடியாகக் காண்பதில்லை. இங்ஙன் செய்வது நிலைக்கு இழிவெனப் பொய்ம்மானம் நச்சுவர் ப்ோலும். மக்களால் தேர்ந்து எடுத்து வந்த குடியரசு மந்திரிகள், மடிசெய்து மானம் கருதக் கெடும் (1028) என்ற குறட் குற்றத்துக்கு