பக்கம்:வள்ளுவம் -ஆராய்ச்சி.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளுவ அரசு 225

ஆளாகாது, நேரடிப் பார்வை செய்ய வேண்டுவல். முன்னறி விப்பின்றித் தம் வீட்டுக்குச் செல்வது போல, ஊர்தொறும் உள்ள தத்தம் அலுவலகங்கட்குப் போவதை ஒர் அரசியல்பாகக் கொள்ள வேண்டுவல்.

வள்ளுவச் செம்மல் நம் தனிப்பெரும் அமைச்சராய் வருவாரேல், அஞ்சல் நிலையம் போல அரசு நிலையங்களை யெல்லாம் ஒழுங்கு செய்வர். மக்கள் வாழ்க்கை இன்று பலவகைப் போராட்டத்தது. இந் நிலையில் ஒவ்வொரு வினையையும் அலுவலகத்துக்கு நேரடி சென்று முடித்துக் கொள்ளல் காலக் கழிவாகும்; வேண்டா முயற்சியாகும்; உள்ள வினைக் கேடாகும். வள்ளுவ அரசிற்கு மக்கள் உயிர்ப்பொரு ளாதலின், ஆசிரிய அமைச்சர் குடிகளை அலையவிடார்; காக்க வையார். அரசோடு தொடர்புடைய எல்லா வினைகளும் கடிதப் போக்குவரத்தால் முடித்துக்கொள்ள வழி வகுப்பர். ‘நும் முடங்கல் வரப்பெற்றோம். இன்னும் நான்கு நாளுள் முடிவு அறிவிப்போம் என்று விடையிறுக்குமாறு வினை செய்வார்க்குக் கற்பிப்பர். நீவிர் ஒருவாரத்தில் வருவதை எதிர்பார்க்கின்றோம். நேர் முகமாக வேண்டிய விளக்கம் சொல்வோம். காலை 9 - 12 மணிக்குள் பார்க்கலாம் என்று வேண்டுழி வேண்டுழி எழுதச் செய்வர். அங்ஙன் வரும் குடிமக்களுக்குக் காட்சி எளியராய்க் கடுஞ்சொல்லர் அல்லராய் நடந்து கொள்ளப் பணிப்பர்.

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும் (553)

என்பது ஆசான் இடிப்புரை. நாள்தொறும் நாடல் என்பது திருக்குறளரசின் உள்நாட்டு வள்ளுவம். அரசு வினையாளர்கள் சிறிதும் தாழ்த்தல் இன்றி மக்கள் காரியங்களை முடித்து அளிப்பரேல், அங்ஙன் வினையாற்றும்படி அமைச்சர்கள் ஊடுருவிப் பார்ப்பரேல், நாடு விடுதலை பெற்றது, என மக்கள் கண்டு கொள்வர்; தேர்வுக்கும் உரியரானோம்; பெருமைக்கும் உரிய ரானோம் எனப் பெருமிதம் அடைவர்.

குறித்த ஒருமணியளவினும் இன்று சிறுபொழுது நீளப் பேசிவிட்டேன். பொறுத்திருந்து கேட்ட உங்கட்கு என் வணக்கம்.

“DJ. J5’.